Perambalur: Wife missing; Husband complained to the police!
பெரம்பலூர்: பெரம்பலூர் காந்தி நகரை சேர்ந்தவர் ராமசாமி மனைவி சரோஜா,27, இவர்களுக்கு திருமணமாகி 9 ஆண்டுகள் ஆகிறது. குழந்தைகள் இல்லை.
இந்நிலையில் 19ம் தேதி அதிகாலையில் சரோஜா வீட்டை விட்டு வெளியே சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து பல இடங்களில் தேடியும் சரோஜா கிடைக்காததால் ராமசாமி தனது மனைவி சரோஜாவை கண்டுபிடித்து தருமாறு கொடுத்த புகாரின்பேரில் பெரம்பலூர் போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.