பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உடற்கல்வித்துறை சார்பில் 20ஆம் ஆண்டு விளையாட்டு விழா இன்று நடந்தது.
இவ்விழாவிற்கு தனலட்சுமி சீனிவாசன் குழுமங்களின் தலைவர் சீனிவாசன் தலைமை வகித்தார். துணைத்தலைவர் கதிரவன், செயலாளர் நீல்ராஜ், இயக்குனர்கள் பூபதி, மணி மற்றும் நிதிஅலுவலர் ராஜசேகர் முன்னிலை வகித்தனர்.
கல்லூரி முதல்வர் அப்ரோஸ் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து, வாழ்த்துரை வழங்கினார். சிறப்பு விருந்தினராக திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம், ஆட்சிக்குழு உறுப்பினர் பார்த்தசாரதி கலந்து கொண்டு விளையாட்டு விழாவை துவக்கி வைத்தார்.
இதனைத்தொடர்ந்து மாணவிகள் அணிவகுப்பு மரியாதையும், விளையாட்டு விழா தீபம் ஏற்றும் நிகழ்வும் நடைபெற்றது. துணை முதல்வர்(பொறுப்பு) கஜலெட்சுமி அறிமுகவுரையாற்றினார்.
விழாவில் சிறப்பு விருந்தினர் பேசியதாவது,
மாணவிகள் கல்வி பயில்வதோடு மட்டுமல்லாமல் விளையாட்டுத்துறையிலும் சிறந்து விளங்க வேண்டும். நம்முடைய பாரம்பரிய விளையாட்டு மனிதன் ஆரோக்கியத்துடன் வாழ மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. ஆனால் இன்றயை பரபரப்பான வாழ்வில் நாம் பாரம்பரிய விளையாட்டை மறந்து வருகிறோம்.
இந்த நிலை மாற வேண்டும். விளையாட்டுத்துறையில் ஒழுக்கம் தேவை. ஓட்டப்பந்தயம், கபடி, கோகோ, வாலிபால் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு போட்டிகளிலும் மாணவிகள் எவ்வித தயங்கமும் இன்றி கலந்து கொண்டு மாவட்ட, மாநில அளவில் வெற்றி பெறும் போது அவ்வெற்றி மேற்படிப்பிற்கும், வேலைவாய்ப்பிற்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று கூறினார்.
விழாவில் மாணவிகள் அணிவகுப்பில் முதல் பரிசு ஆங்கிலத்துறையும், இரண்டாம் பரிசு உயிர் வேதியியல் துறையும், மூன்றாம் பரிசு நுண்ணுரியல் துறையும் பெற்றது. ஒட்டு மொத்த மாணவிகளுக்கான சாம்பியன் சிப் பரிசினை கணிதவியல் துறையினைச் சார்ந்த இரண்டாமாண்டு மாணவி சிந்து பெற்றார்.
மேலும் கபடி, ஷட்டில், பேட்மிட்டன், பாஸ்கட்பால், கோ கோ, 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர், 800 மீட்டர், 1500 மீட்டர், 4 x 100, 4 X 400, தொடர் ஓட்டம், உயரம் தாண்டுதல்,
நீளம் தாண்டுதல், தட்டு எறிதல் போன்ற விளையாட்டுகளில் சுமார் 450-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டு முதல் மூன்று இடங்களை பெற்றவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
விளையாட்டு விழாவிற்கான ஏற்பாடுகளை துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குனர்கள் செய்திருந்தனர்.
இவ்விழாவில் 3ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்.
முன்னதாக உடற் கல்வித் துறையைச்சேர்ந்த பிரியா வரவேற்றார். முடிவில் உடற்கல்வித்துறை பேராசிரியர் அனிதா நன்றி கூறினார்.