Perambalur: Works worth 11.58 crores in Alathur Union, Minister Sivasankar inaugurated!
தமிழ்நாடு போக்குவரத்துத்துறை அமைச்சரும், குன்னம் தொகுதி எம்.எல்.ஏவுமான சா.சி.சிவசங்கர், பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ரூ.11.58 கோடி மதிப்பீட்டில் கலெக்டர் கற்பகம் தலைமையில் இன்று பல்வேறு பல்வேறு புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்தார்கள்.
மேலமாத்தூர் ஊராட்சியில் சமக்ரா சிஷா திட்ட நிதியிலிருந்து பொதுப் பணித்துறை மூலம் ரூ.20,52,000 மதிப்பீட்டில் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு ஒரு கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டும் பணியும், ஆதனூர் ஊராட்சியில் முதலமைச்சரின் கிராமசாலை திட்டத்தின் கீழ் ரூ. 1,48,00,000 மதிப்பீட்டில் ஆதனூர் முதல் பிலிமிசை வரை தார்சாலை அமைக்கும் பணியும், சிறுகன்பூர் ஊராட்சியில் ரூ. 39,62,000 மதிப்பீட்டில் அரசு துணை சுகாதார நிலையம் கட்டிடம் கட்டும் பணியும், கொளக்காநத்தம் ஊராட்சியில் நெடுஞ்சாலை துறை மூலம் ரூ. 8,24,00,000 மதிப்பீட்டில் கொளக்காநத்தம் முதல் காரை வரை 4800 மீ. சாலையை மாநில சாலையாக தரம் உயர்த்தி அகலப்படுத்தும் பணியும் தொடங்கி வைத்தார்
முன்னதாக, இலந்தங்குழி ஊராட்சியில் ஜல் ஜீவன் மிஷன் திட்ட சேமிப்பு நிதியிலிருந்து ரூ.15,00,000 மதிப்பீட்டில் கட்டப்பட்ட தண்ணீர் தொட்டியையும், ரூ.41,80,000 மதிப்பீட்டில் வீட்டுக்கு வீடு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கும் திட்டத்தினையும், குன்னம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் ரூ. 6,00,000 மதிப்பீட்டில் போடப்பட்ட தார்சாலையினையும்,
சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.32,00,000 மதிப்பீட்டில் கொட்டரை ஊராட்சியில் துவக்கப் பள்ளிக்கு 3 வகுப்பறை கொண்ட கட்டிடத்தினையும், குரும்பாபாளையம் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.20,10,000 மதிப்பீட்டில் கட்டப்பட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கக் கட்டிடத்தினையும், காரை ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ. 11,00,000 மதிப்பீட்டில் கட்டப்பட்ட முழுநேர பொதுவிநியோகக் கட்டிடத்தினையும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
இந்நிகழ்வுகளில் ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் ந.கிருஷ்ணமூரத்தி, திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி பெரம்பலூர் மாவட்டஅமைப்பாளர் வெ.கார்மேகம், மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் கொளக்காநத்தம் ராகவன், இலந்தங்குழி அகிலா ராமசாமி, அனைப்பாடி பாலமுருகன், கொட்டரை ஒன்றிய கவுன்சிலர் இளவரசு உள்ளிட்ட பல்வேறு அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.