Perambalur : Year 9 Sports Festival at Siruvachur Almighty Vidyalaya School!
பெரம்பலூர் அருகே சிறுவாச்சூர் ஆல்மைட்டி வித்யாலயா பப்ளிக் சிபிஎஸ்இ பள்ளியில் 9 ஆம் ஆண்டு விளையாட்டு விழா தாளாளர் முனைவர். ஆ.ராம்குமார் தலைமை வகித்தார். பள்ளி முதல்வர்கள் தீபா சந்திரோதயம், வரவேற்றனர்.
பெரம்பலூர் காவல் துறை டி.எஸ்.பி. பழனிசாமி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார், அவர் அப்போது பேசியதாவது: 21 ஆம் நூற்றாண்டில் நாம் தெரிந்து கொண்ட கண்டு பிடிப்பு என்பது என்னடா இது வாழ்க்கை என்று நினைக்காமல் இது என்னோட வாழ்க்கை என்று நினைத்தால் நிச்சயம் முன்னேறிவிடலாம் அதோடு வாழ்க்கையில் கல்வியின் பாடநூல்களை தாண்டி நல்ல நூல்களை படிக்க பெற்றோர்கள், குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
பின்னர் இஸ்ரோவின் 3வது நிலவுப் பயணமான சந்திரயான் 3 ன் மாதிரி வடிவம் அமைக்கப்பட்டு இஸ்ரோ விஞ்ஞாணி ரமேஷ் அவர்களுடன் எல்இடி திரை மூலம் கானொளி வாயிலாக பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் ஆசிரியர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
பெரம்பலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சக்திவேல், மேடைப் பேச்சாளர் கயல்விழி, பள்ளியின் பங்குதாரர்கள் சி.மோகனசுந்தரம், சிவகுமார், ஆசிரியர்கள்
ராஜேந்திரன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கோகனெட், மற்றும் 200 மீட்டர் ஓட்டப்பந்தயம், பெற்றோர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் கேடயங்களும் வழங்கப்பட்டது. பள்ளி மாணவிகள் நன்றி கூறினர்.