Perambalur: Youth arrested for trying to break into house; Police investigation!
பெரம்பலூர் மாவட்டம், வடக்கலூர் அகரம் கிராமத்தைச் சேர்ந்த அண்ணாதுரை (43) என்பவர் எறையூரில் பிரியாணி கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் இன்று ஆசாமி ஒருவர் இவரது வீட்டில் புகுந்து திருட முயன்றார்.
இது குறித்து அப்பகுதி மக்கள் தெரிவித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற மங்களமேடு போலீசார் வாலிபரை கைது செய்து நடத்திய விசாரணை நடத்தியதில், திருவாரூர் மாவட்டம், முனியூர் அம்பேத்கர் நகரை சேர்ந்த முருகையன் மகன் தினேஷ்குமார் என்பது தெரியவந்தது. அவரை, கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறைக்கு அனுப்பி வைத்தனர்.