Perambalur: Youth tried to molest girl, He arrested under POCSO Act!
பெரம்பலூர் அருகே பழைய வேலூரை சேர்ந்தவர் அருணாச்சலம் மகன் சக்திவேல் (42). இவர் 13 வயது பள்ளி சிறுமியை கையை பிடித்து இழுத்து அவரிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். சிறுமி சத்தம் போட்டுவிட்டு தப்பி ஓடி விட்டார்.
புகாரின்பேரில், வழக்குப் பதிவு செய்த பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீசார், சிறுமியிடம் தவறாக நடக்க முயன்ற சக்திவேலை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து, பெரம்பலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.