Perambalur: Masi Magam Festival at S. Aduthurai Arulmiku Kutram Porutthavar Temple; Thousands of devotees attended.

பெரம்பலூர் மாவட்டம், லப்பைக்குடிக்காடு அருகே உள்ள சு.ஆடுதுறையில் உள்ள பழமை வாய்ந்த அருள்மிகு சுகந்த குந்தலாம்பிகை உடனுறை அருள்மிகு குற்றம் பொறுத்தவர் ஆலயத்தில் மாசி மகம் நடைபெற்றது.

அதை முன்னிட்டு கோவில் அருகில் உள்ள சுவேத நதியில் பொதுமக்கள் தங்கள் பெற்றொர்கள் உள்ளிட்ட முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

மாசி மகத்தை முன்னிட்டு அதிகாலையில் சுவாமி மற்றும் அம்மனுக்கு பால் பன்னீர் தயிர் இளநீர் உட்பட மூலிகை பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது பின்னர் மலர் அலங்காரம் செய்யப்பட்ட சாமிக்கும் அம்மனுக்கும் சிறப்பு தீப ஆராதனை நடந்தது.


விடியற்காலை முதலே பென்னக்கோணம். ஒகளுர், அத்தியூர், நன்னை, வயலப்பாடி, வேப்பூர். காருகுடி,வேப்பூர், பெருமத்தூர் உள்ளிட்ட சுற்றுவட்ட கிராம பொதுமக்கள் சுவாமியை வழிபட்டனர். பல இடங்களில் அன்னதானம் நடந்தது.

மாசி மக திருவிழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் (பொ) அசலாம்பிகை மற்றும் பூஜை ஏற்பாடுகளை ஹரிஹரன் குருக்கள் செய்திருந்தனர்.
மங்களமேடு காவல் உதவி ஆய்வாளர் சரவணகுமார் தலைமையில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு ஊர்த்திருவிழாக்களை போன்று, 90 கிட்ஸ் மனதை கொள்ளை பொருட்கள் திருவிழாக்கடைகளில் ஆங்காங்கே விற்கப்பட்டது. இன்று சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கோவிலுக்கு வந்து சென்றனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!