பெரம்பலூர் சார் ஆட்சியராக பணிபுரிந்து வந்த ப.மதுசூதன் ரெட்டி சென்னை நில நிர்வாகத் துறை இணை ஆணையராக கடந்த 27.2.2016 அன்று பணிமாறுதல் செய்யப்பட்டார்.
பின்னர், தேனி மாவட்டத்தில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அலுவலராக பணிபுரிந்து வந்த ரா.பேபி பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியராக 28.2.2016 அன்று பணிமாறுதல் செய்யப்பட்டார்.
அதனடிப்படையில் இன்று பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ரா.பேபி பொறுப்பேற்றுக் கொண்டார்.