பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டாசியர் அலுவலகத்தில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிபார்க்கும் பணி நடந்து வருகிறது
தமிழ்நாட்டில் நடைபெற இருக்கின்ற சட்டமன்றப் பொதுத்தேர்தலுக்கு பயன்படுத்தும் வகையில் தலைமைத் தேர்தல் ஆணையரின் உத்தரவின்படி குஜராத் மாநிலம் சுரேந்திரநகர் மாவட்டத்திலிருந்து 727 வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் 860 கட்டுப்பாட்டுக்கருவிகள் என ஆகமொத்தம் 1587 கருவிகள் வேப்பந்தட்டை வட்டாட்சியர் அலுவலகத்திற்கு கடந்த 27.1.2016 அன்று கொண்டுவரப்பட்டு அனைத்துக்கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் பாதுகாப்பாக அடுக்கி வைக்கப்பட்டது.
இந்த கருவிகளை சரிபார்க்கும் பணி கடந்த பிப்.15 முதல் துவங்கப்பட்டு தொடர்ந்து நடந்து வருகின்றது. இந்த கருவிகளை சரிபார்க்க பெல் நிறுவனத்திலிருந்து நான்கு பொறியாளர்கள் அடங்கிய குழுவினர் 1587 இயந்திரங்களில் பிப். 17 வரை 727 இயந்திரங்கள் சரிபார்க்கப்பட்டுள்ளது.
மீதமுள்ள வாக்குபதிவு இயந்திரங்களை சரிபார்க்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது, என மாவட் ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான க.நந்தக்குமார் தெரிவித்துள்ளார்.