Performance Exam in Perambalur Allmitty Vidyalaya School: 1,300 participants
பெரம்பலூர் அருகே சிறுவாச்சூர் ஆல்மைட்டி வித்யாலயா பப்ளிக் பள்ளியில், பள்ளி மாணவர்களுக்கான ஒலிம்பியாட் எனும் திறனறித் தேர்வு நேற்று நடைபெற்றது.
இத்தேர்வுகளை தொடக்கி வைத்த, பள்ளி தாளாளர் ஆ. ராம்குமார் தெரிவித்ததாவது கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் இத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இதில், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு, மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 2 ஆம் வகுப்பு முதல் எஸ்எஸ்எல்சி வரை பயிலும் மாணவ, மாணவிகள் பங்கேற்கின்றனர். 2 – 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு 40 மதிப்பெண்கள் கொண்ட வினாத்தாளும், 6-10 ஆம் வரை பயிலும் மாணவர்களுக்கு 60 மதிப்பெண்கள் கொண்ட வினாத்தாள்களும் வழங்கப்படுகிறது.
இத்தேர்வு எழுதுவதன் மூலம் அனைத்து வகையான போட்டித் தேர்வுகளை எதிர்கொள்வதற்கான தன்னம்பிக்கை வளர்ந்து, தேர்வுக்கான அச்சத்தை போக்குகிறது. மேலும், பள்ளி பருவத்திலேயே ஊக்கப்படுத்துவதுடன், வினாத்தாள்கள் எவ்வாறு இருக்கும் என்பதையும் அறிந்துகொள்ள முடியும். மேலும், இத்தேர்வு எழுதும் மாணவர்களின் பெற்றோர்களுக்கிடையே விளையாட்டுப் போட்டிகள், பயிற்சிகள், உடல் மற்றும் மனத்திறனை மேம்படுத்துவதற்கான நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன.
இதில் வெற்றி பெறும் பெற்றோருக்கு பரிசு வழங்கப்படுகிறது. அதேபோல, இத் திறன் அறித்; தேர்வில் வெற்றிபெறும் மாணவ, மாணவிகளுக்கு வகுப்பு வாhpயாக முதல் மூன்று பேருக்கு பரிசும், சான்றிதழ்களும், பங்கேற்கும் அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ்களும் வழங்கப்படும் என்றார்.
தேர்வில், பள்ளி முதல்வர் சிவகாமி, துணை முதல்வர் சாரதா செந்தில்குமார், ஒருங்கிணைப்பாளர்கள் சந்திரோதயம், ஹேமா, ஆசிரியர்கள் மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் ஆயிரத்து முன்னூறுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.