Perfume Factory and Arts College in the Manachanallur area, : Make sure the candidate Parivendhar

பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் பாரிவேந்தருக்கு பூனாம்பாளையம் கிராம பெண்கள் நூறுக்கும் மேற்பட்டோர் திரளாக ஆரத்தி எடுத்து வரவேற்ற போது எடுத்தப்படம்.

மண்ணச்சநல்லூர் பகுதியில் வாசனை திரவிய தொழிற்சாலை, கலைக்கல்லூரி அமைத்து கொடுப்பதாக மதசாற்பற்ற முற்போக்கு கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில போட்டியிடும் ஐஜேகே தலைவர் பாரிவேந்தர், வாக்கு சேகரிப்பின் போது உறுதி அளித்தார்
பூனாம்பாளையம் ஊர்காடு கிராமத்தில் உள்ள அருள்மிகு மாரியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்து, இராசாம்பாளையம், சாலக்காடு, அய்யம்பாளையம் கடைவீதி, தெற்குதத்தமங்கலம், தளுதாளப்பட்டி, கீழப்பட்டி, சிறுகுடி, ஓமாந்தூர் பஸ் ஸ்டாப், வீராணி, சாலப்பட்டி, திருவெள்ளரை கடைவீதி, தில்லாம்பட்டி, திராம்பாளையம் கடைவீதி, திருப்பைஞ்சீலி, வால்மால்பாளையம், வால்மால்பாளையம் கீழூர், வால்மால்பாளையம் மேலூர் தெற்கியூர், நெ.2 கரியமாணிக்கம், கிளியநல்லூர் கடைவீதி, துடையூர், திருவாசி, நொச்சியம் பாச்சூர், கடுகாத்துறை, கோவக்கக்குடி, கோபுரப்பட்டி, அழகிய மணவாளம், மண்ணச்சநல்லூர், ஆகிய 30க்கும் மேற்பட்ட கிராமங்களில், தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
வாக்களர்களிடம் வேட்பாளர் பரிவேந்தர் பேசியதாவது:
2014 கடந்த முறை இந்த தொகுதியில் மண்ணச்சந்ல்லூர் தொகுதியில் அதிக வாக்குகளை பெற்றேன். அதற்காக முதலில் நன்றி தெரிவித்து கொள்கிறேன். வருகிற தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்வீர்கள் என்று நம்புகிறேன். நான் நாடளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்ததும் உங்கள் ஊர் தேவைகள் எதுவாக இருந்தாலும் செய்து கொடுப்பேன் என்று உறுதி அளிக்கிறேன்.
வேலைவாய்ப்பு பெருக தொழிற்சாலைகள் கொண்டு வர கோரிக்கை வைத்துள்ளீர்கள். இந்த மண்ணச்சநல்லூர் தொகுதி மக்கள் அதிகபடியான வாக்குகளை எனக்கு மீண்டும் தர வேண்டும். திமுக காங்கிரஸ் தேர்தல் அறிக்கை சிறப்பாக உள்ளது. இரண்டு பேரும் வெற்றி பெற்று வளர்ச்சியை செய்வார்கள்.
மத்திய மாநில ஆட்சி அகற்ற பட வேண்டும். மோடி சொன்ன வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றவில்லை.
பூ வியாபாரம் அதிகமாக உள்ள இந்த பகுதியில் வாசன திரயும் தொழிற்சாலையும், கலை கல்லூரி கோரிக்கையை நிறைவேற்றுவேன். அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அரசு கலை கல்லூரி கொண்டு வர அனைத்து முயற்சி எடுக்கப்படும். ஆன்மீக சுற்றுலா தலங்களாக இப்பகுதி மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். கிராமங்களுக்கு அரசு பேருந்து வசதிகள் மேம்படுத்தப்படும்
தற்போது உள்ள உறுப்பினர் தொகுதி பக்கம் வந்தாரா என்றால் இல்லை என்று கூறுகிறார்கள். நான் அப்படி இருக்க மாட்டேன்.
ஏமாற்றம் மட்டுமே மோடி அரசு. திமுக தலைவர் ஸ்டாலின் உறுதியாக முதல்வராவர். திமுக தேர்தல் அறிக்கை கிராம மக்களுக்கு விடியலாக உள்ளது. எனவே திமுக வேட்பாளரான எனக்கு ஆதரவு தாருங்கள்.
தீராம்பாளையம் கடைவீதியில் திமுக தேர்தல் அலுவலகத்தை வேட்பாளர் பாரிவேந்தர் திறந்து வைத்தார். இந்த தேர்தல் ஒரு சடங்கு இல்லை, இந்திய பொருளாதாரம் , வளர்ச்சி க்கான தேர்தல். யாரை தேர்வு செய்வது என்பதை கவனமாக தேர்வு செய்யவும். அவர்கள் பின்பலம் தெரிந்து கொள்ள வேண்டும்.
2011 தானே புயல் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு 7.50கோடி ரூபாய் கல்வி கட்டணத்தை தள்ளுபடி செய்தேன். கஜா புயல் பாதிக்கப்பட்ட , எஸ் ஆர் எம் மாணவர்கள் 650 பேருக்கும் கல்வி கட்டணம் 49 கோடி தள்ளுபடி செய்தோம். தொடர்ந்து இளைஞர்களுக்கு சேவை செய்து வருகிறோம். யார் நாடளுமன்றத்தில் தொகுதி பிரச்சனை குறித்து பேசி தேவைகளை பூர்த்தி செய்வார்கள் என்று தெரிந்து கொள்ள வேண்டும்.
நூறு நாள் வேலை 159 நாட்களாக மாற்றப்படும். உங்கள் பிரச்சனை எதுவாக இருந்தாலும் என்னை வந்து சந்திக்கலாம். விவசாய பொருட்களை பதப்படுத்த குளிரூட்டப்பட்ட கிடங்கு அமைப்பேன். கூட்டுக்குடிநீர் திட்டத்தை விரிவாக்கம் செய்து குடிநீர் தட்டுப்பாடு போக்குவேன். இதற்கான நிதியை பாரளுமன்றத்தில் நிதி பெற்று கால்வாய்கள், போர்கள் அமைத்து கொடுப்பேன்.
மனிதர்கள் அனைவரும் சமம் என்று நினைப்பவன் நான் , அந்த வகையில் நான் உங்களை சந்திப்பேன், என பேசினார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!