Periyar Award for Social Justice : Perambalur Collector Information!
சமூக நீதிக்காக பாடுபடுபவர்களை சிறப்பு செய்வதற்காக ” சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது” 1995ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. விருது பெறுவோருக்கு ரூ.5 லட்சம் விருது தொகையும், ஒரு சவரன் தங்கப்பதக்கமும், தகுதியுரையும் வழங்கப்படும். இவ்விருதாளர் முதலமைச்சரால் தேர்வு செய்யப்படுகிறார்.
2023 – ஆம் ஆண்டிற்கான உரிய விருதாளரை தேர்ந்தெடுக்க பரிந்துரைகள் வரவேற்கப்படுகிறது. எனவே, பெரம்பலூர் மாவட்டத்தில் சமூக நீதிக்காக பாடுபட்டு, பொது மக்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்திட மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் அதன் பொருட்டு எய்திய சாதனைகள் ஆகிய தகுதிகள் உடையவர்கள், தங்களது விண்ணப்பம், சுயவிவரம், முழு முகவரி, தொலைபேசி எண், மற்றும் சமூக நீதிக்காக பாடுபட்டு பணிகள் குறித்த விவரம் மற்றும் ஆவணங்கள் உள்ளடக்கியதாக இருத்தல் வேண்டும்.
விண்ணப்பங்களை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் பெற்று 15.09.2023 -க்குள் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு சமர்ப்பிக்க வேண்டும், என பெரம்பலூர் கலெக்டர் கற்பகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், இவ்வாறு தெரிவித்துள்ளார்.