Periyar, MGR, Memorial Day: The garland Wear to statues of the ADMK Party People in Perambalur

அ.இ.அ.தி.மு.க., நிறுவனரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எம்.ஜி.ஆரின் 31-வது ஆண்டு நினைவு நாளையொட்டி பெரம்பலூரில் அதிமுகவினர், மாவட்ட செயலாளரும், குன்னம் தொகுதி எம்.எல்.ஏவுமான ஆர்.டி.ராமச்சந்திரன் தலைமையில், பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள எம்.ஜி.ஆரின் உருவ சிலைக்கு மாவட்ட அதிமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதே போன்று, பெரியாரின் 45 வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, பெரியாரின் சிலைக்கும், அண்ணா, ஜெயலலிதா சிலைகளுக்கும் மாலை அணவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இதில், எம்பிக்கள் சந்திரகாசி (சிதம்பரம்), மருதைராஜா (பெரம்பலூர்), முன்னாள் எம்.எல்.ஏ, பூவை.செழியன், எம்.ஜி.ஆர் மன்றம் எம்.என்.ஆர், மற்றும் பொறுப்பாளர்கள் ராணி, கர்ணன் (ஆலத்தூர்), சிவப்பிரகாசம் (வேப்பந்தட்டை), கிருஷ்ணசாமி (வேப்பூர் ), மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி பெருமாள், பெரம்பலூர் நகர செயலாளர் ஆர்.ராஜபூபதி, மகளிர் அணி, வழக்கறிஞர் அணி, சிறுபான்மையினர் அணி, அண்ணா தொழிற்சங்கம் வீரபாண்டியன், முன்னாள் சேர்மன் ஆர்.வெண்ணிலா, காடூர் ஸ்டாலின். கீழக்கரை பன்னீர் செல்வம், முன்னாள் கவுன்சிலர் சின்னராஜேந்திரன், பாஸ்கி (எ) பாஸ்கரன், திருமாந்துறை இளங்கோவன், சிறுவாச்சூர் அண்ணாமலை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதையொட்டி பெரம்பலூர் நகரின் பல இடங்களில் அலங்கரிப்பட்ட எம்.ஜி.ஆரின் உருவ படத்திற்கு பல்வேறு பகுதிகளில் தொண்டர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இது போன்று, பெரம்பலூர், ஆலத்தூர், வேப்பூர், வேப்பந்தட்டை ஒன்றியங்களில் எம்ஜிஆர் நினைவு நாளையொட்டி அதிமுக தொண்டர்கள் எம்.ஜி.ஆரின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.