periyar-park பெரம்பலூர்: பெரம்பலூரில் பெரியார் பூங்காவை கருணாநிதி பார்வையிட்டு திறந்து வைத்தார்.

பெரம்பலூர் மாவட்டம் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை கல்பாடி பிரிவு சாலை அருகே திமுக பொதுக்குழு உறுப்பினரும், பெரியார் தொண்டருமான ஓவியர்.கி.முகுந்தன் பெரியார் பூங்கா ஒன்றை தனது சொந்த நிலத்தில் பல லட்சம் மதிப்பில் நிறுவி உள்ளார். அதில் பெரியார் பெருமைகளை விளக்கும் கருத்துகளும் சிந்தனைகளும், நிறைந்த கல்வெட்டுகளை பதிந்துள்ளார்.

இது போன்று அம்பேத்கர் கருத்துகளையும் கல்வெட்டுகளாக பதிந்து வைத்துள்ளார். பூங்கா அழகுற அமைத்து அதனை பசுமையாக வைத்துள்ளர். அதன் நுழைவு வாயிலில் அமைக்ககப்பட்ட உள்ள பெரியார் சிலை ஆசியாவிலேயே மிகப் பெரிய அளவில் நிலத்தில் 20 அடி உயரத்திற்கு பீடம் அமைத்து , அதற்கு மேல் 12 அடி உயரத்தில் பெரியார் சிலையை தேசிய நெடுஞ்சாலையில செல்லும் அனைவரும் காணும் வகையில் வடிவமைத்துள்ளார், சிலைக்கு தங்க நிற வர்ணம் பூசப்பட்டுள்ளது.

பெரியாரின் கருத்துகளையும், சிந்தனைகளையும், மக்கள் மறந்து வரும் வேளையில் இளைய தலைமுறையினர் அறிந்து வகையில் பெரியார் சிலையும், பூங்காவும் அமைக்கப்பட்டுள்ளது பாராட்டப்பட வேண்டிய விசயமாகும்.

அமைதியான சுற்றுச் சூழல் மற்றும் பசுமை தோட்டங்களையும் அழகுற அமைத்துள்ளார்.

இதனை இன்று காலை பெரம்பலூர் வேட்பாளர் பிரச்சாரத்திற்கு வந்த திமுக தலைவர் மு.கருணாநிதி பார்வையிட்டு பாராட்டு தெரிவித்தார். பின்னர், தலைவர் மு.கருணாநிதிக்கு நினைவுப் பரிசாக பெரியார் சிலை நினைவு பரிசு வழங்கபட்டது.

அப்போது முன்னாள் அமைச்சரும், திமுக கட்சியின் கொள்கை பரப்பு செயலாளருமான ஆ.இராசா, திமுக மாவட்ட செயலாளர் குன்னம்.சி.ராஜேந்திரன், பூங்கா நிறுவனரும், திமுக பொதுக்குழு உறுப்பினரும், முன்னாள் நகராட்சி துணைத் தலைவரும், பெரியார் தொண்டருமான ஓவியர்.கி.முகுந்தன், முன்னாள் எம்.எல்.ஏக்கள் ராஜ்குமார், டாக்டர் தேவராஜன், மாநில மருத்துவர் அணி பொறுப்பாளர் டாக்டர் வல்லபன், முன்னாள் திமுக மாவட்ட செயலாளரும், எம்.பியுமான சிவசுப்ரமணியன், மாவட்ட மகளிரணி பொறுப்பாளர் மகாதேவி ஜெயபால், மாவட்ட அவைத் தலைவர் அ.நடராஜன், வாலிகண்டபுரம் ஊராட்சி மன்ற தலைவர் ரவிச்சந்திரன், 007 மேலாளர் மகேந்திரன் மற்றும் ஊழியர்கள் பொதுமக்கள், திராவிட கழகத்தினர், திமுக கட்சியினர் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!