Periyarial Training Workshop at Perambalur; MLA Prabhakaran inaugurated!
பெரம்பலூர் அண்ணா பேருந்து நிலையம் அருகே உள்ள திமுக அலுவலகத்தில் திராவிடர் கழகம் சார்பில் பெரம்பலூர் மாவட்ட தலைவர் தங்கராசு தலைமையில் ஒருநாள் பெரியாரியல் பயிற்சி பட்டறை நடைபெற்றது.
இந்த பயிற்சி பட்டறையில் மாவட்ட செயலாளர் விஜேந்திரன் வரவேற்பு உரையாற்றினார், தலைமைக் கழக அமைப்பாளர் சிந்தனைச்செல்வன் தொடக்க உரையாற்றினார், மாநில இளைஞரணி செயலாளர் நாத்திகப் பொன்முடி அறிமுக உரையாற்றினார். பெரம்பலூர் எம்.எல்.ஏ பிரபாகரன் பயிற்சி வகுப்பினை தொடக்கி வைத்தார்.
பின்னர் ஆசிரியர் அழகிரிசாமி, முனைவர் அதிரடி அன்பழகன், எழுத்தாளர் வில்வம், முனைவர் துரை சந்திரசேகரன், வழக்கறிஞர் பிரின்சு என்னாரெசு பெரியார், ஜெயக்குமார் ஆகியோர்கள் பயிற்சி வகுப்பு எடுத்தனர். இந்த பயிற்சி பட்டறை வகுப்பில் சுமார் 80க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் மற்றும் இளைஞர்கள் கலந்து கொண்டனர்.