Permits for Essential Food Items and Vehicles Going to Manufacturing Companies: Collector Information

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் வே.சாந்தா விடுத்துள்ள தகவல்:

கொரோனா வைரஸ் தொற்று நோய் தடுத்திடும் வகையில் பெரம்பலூர் மாவட்டத்தில் குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 144 இன் கீழ் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து ஆணையிடப்பட்டுள்ளது.

தமிழக அரசு அத்தியாவசிய உணவுப் பொருள்கள் மற்றும் அத்தியாவசிய பொருள்கள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு வாகன அனுமதி சீட்டு வழங்கி வாகனங்கள் சென்று வர அனுமதிக்கலாம் என்றும், அனுமதி சீட்டு மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளார் (பொது) அவர்களிடம் பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.

தற்போது வாகன அனுமதி சீட்டு அந்தந்த வருவாய் கோட்டாட்சியரால் மற்றும் பெரம்பலூர் மாவட்ட தொழில் மையம் பொது மேலாளரால் வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகவே, பெரம்பலூர் மாவட்டத்தில் அத்தியாவசிய பொருள்கள் எடுத்து வருவதற்கு வாகன அனுமதி சீட்டு பெறுவதற்கு பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் அல்லது பெரம்பலூர் மாவட்ட தொழில் மையம் பொது மேலாளர் அலுவலகத்தில் அணுகி அனுமதிச் சீட்டு பெற்றுக் கொள்ளலாம், என தெரவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!