Persons with disabilities who do not have access to corona relief can apply by Nov. 30: Perambalur Collector Information

பெரம்பலூர் மாவட்டத்தில் கோவிட்-19 நிவாரணத்தொகை ரூ.1000- பெறாத தேசிய அடையாள அட்டை பெற்றுள்ள மாற்றுத் திறனாளிகள் நிவாரணத் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என பெரம்பலூர் கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் (கோவிட்-19) நோய் தொற்று பரவலினை தடுக்கும் தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. எனவே மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெற்றுள்ள மாற்றுத் திறனாளி நபர்களுக்கு தலா ரூ.1000- ரொக்க நிவாரணத்தினை அவர்கள் வீட்டிலேயே வழங்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்கள்.

அதன் அடிப்படையில் இதுவரை பெரம்பலூர் மாவட்டத்தில் தேசிய அடையாள அட்டை பெற்றுள்ள 8600-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் நிவாரணத் தொகை பெற்றுள்ளனர். இந்த நிவாரணத் தொகை அரசு ஊழியர்களாக பணிபுரியும் மாற்றுத்திறனாளிகள் முதல் அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் வருமான உச்சவரம்பின்றி வழங்கப்படுகிறது.

எனவே இதுவரை நிவாரணத் தொகை பெறாத தேசிய அடையாள அட்டை பெற்றுள்ள மாற்றுத்திறனாளி நபர்கள் வருகிற 30.11.2020-க்குள் தாங்கள் வசிக்கும் பகுதியின் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்களை 9499933485 என்ற கைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றின் நகல்களை அளித்து நிவாரணத்தொகையினை பெற்று பயனடையலாம் என அதில் தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!