Petition to Minister S.S.Sivasankar to make the staff of the AIDS Control Board who have been working for more than 15 years permanent!

எய்ட்ஸ் கட்டுப்பாட்டு ஊழியர் சங்கத்தின் சார்பில், பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கரிடம், அச்சங்கத்தின் மாநில செயலாளர், அபிமன்னன் தலைமையில் மாவட்ட பொருப்பாளர்கள் கொடுத்த மனுவில் தெரிவித்திருப்பதாவது:

தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் மூலம் தமிழகம் முழுவதும் மருத்துவமனைகளில் பணியாற்றிவரும் ஆற்றுப்படுத்துனர்கள், ஆய்வக நுட்புணர்கள் , ரத்த வங்கி பிரிவு ஊழியர்கள், கூட்டு மருந்து சிகிச்சை பிரிவு ஊழியர்கள், பால்வினை நோய் பிரிவு ஊழியர்கள், மற்றும் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு ஊழியர்கள் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக தமிழக அரசின் சுகாதாரத் துறையின் கீழ் சுகாதாரத்துறை செயலாளர் மற்றும் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க திட்டத்தில், தமிழக அரசின் கீழ் பணியாற்றி வருகின்றோம். மேலும் கொரோனா சிகிச்சை மையங்கள் மற்றும் கட்டுப்பாட்டு மையங்களிலும் பணியாற்றி வருகின்றோம்.

எனவே கொரோனா வைரஸ் ஒழிப்பில் போரில் பணியாற்றி வரும் முன்கள பணியாளர்களுக்கான ஊக்கத் தொகையை தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரிய ஊழியர்களுக்கும் வழங்க வேண்டும், பணிபுரியும் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கு மாதந்தோறும் ஊதியத்தை முதல் தேதியன்று வழங்க பரிந்துரை செய்க் கோரியும்,

நடந்த சட்டமன்றத் தேர்தல் திமுக அறிக்கையில் (வாக்குறுதி எண் 153) குறிப்பிட்டுள்ளதை போல 15 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரிய ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய அரசுக்கு பரிந்துரை செய்யவும், ஊழியர்கள் அனைவருக்கும் வருங்கால வைப்பு நிதி , மருத்துவ காப்பீடு, மற்றும், பணியின் போது இறக்கும் ஊழியர்களுக்கு நிவாரணம் வழங்கிடவும் மேலும் இறந்தோரின் குடும்பத்தினருக்கு அரசு பணி வழங்க அரசுக்கு பரிந்துரை செய்யும்படி பல்வேறு கோரிக்கைகளை மனு கொடுத்தனர். அதை பெற்றுக் கொண்ட அமைச்சர் சிவசங்ககர், அரசிடம் எடுத்துரைப்பதாக உறுதி அளித்தார். பெரம்பலூர் எம்.எல்.ஏ பிரபகாரன், அச்சங்கத்தின், மாவட்டத் தலைவர் பழனிவேல் ராஜா, மாவட்ட செயலாளர் த. அருண்குமார், மாவட்ட பொருளாளர் ஆ.கரும்பாயிரம், மாவட்ட துணைத் தலைவர் சூ.தாமஸ் விக்டர் உள்ளிட்ட சங்கப் பிரதிநிதிகள் பலர் உடனிருந்தனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!