Petition to Perambalur Collector seeking action against the contractor who did not pave the tar road properly!
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை பாமக ஒன்றிய செயலாளர் சின்னசாமி என்பவர் கலெக்டரிம் கொடுத்துள்ள மனுவில் தெரிவித்துள்ளதாவது:
பெரியவடகரையிலிருந்து – பாண்டாகப்பாடி வரை செல்லும் சாலை குன்றும், குழியுமாக இருந்து வந்தது. அதனால் மத்திய அரசின் நிதியிலிருந்து எங்கள் ஊர் சாலையை செப்பணியிட ரூபாய் 28 லட்சத்திற்கு மேல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தார் சாலையை, எங்கள் பகுதியை சேர்ந்த சப்-கான்ட்ராக்டர் பழனிமுத்து, தரமற்ற ஜிப்ஸ் கலவை கொண்ட தார் சாலையை அமைத்துள்ளார். நான் கிராம மக்களோடு சேர்ந்து சென்று, அரசு விதிகளின் படி எந்தவிதமான கட்டுமான வேலைகளும் ஏதும் செய்யாமல் நேரடியாக பழைய சாலையின் மீதே 3 கிலோ மீட்டர் தூரம் வரை ஒரு செ.மீ கன அளவில் சாலையை அமைத்ததை நாங்கள் கேட்டதற்கு நீ எந்த அதிகாரியிடம் வேண்டுமானாலும் புகார் கொடு, நான் எல்லோருக்கும் கமிஷன் கொடுத்திருக்கிறேன் என்று திமிராக பதில் அளிப்பதால், அந்த தரமான முறையான உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் அவர் தெரிவித்துள்ளார்.