Petition to the Collector of Perambalur that the people are suffering due to the toxic gas emitted by the factory!
பெரம்பலூர் கலெக்டர் கற்பகத்திடம், திமுகவின் கூட்டணி கட்சியை சேர்ந்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவின் விவரம்:
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், நாரணமங்கலம் கல்லுமலை பகுதியில், மருதை ரோடு செல்லும் பகுதியில் இயங்கி வரும் PCV பிளாண்ட் தொழிற்சாலையில் இருந்து ஒரு வகையான நச்சு வெளியேறுவதால் அங்கு வசிக்கும் 30-க்கும் மேலான குடும்பங்கள் மற்றும் பொது மக்களுக்கு உடல் அரிப்பு மற்றும் மூச்சு திணறல், குடிநீரை பயன்படுத்துவதில் மேலும் உணவருந்தவே இயலாமலும் வசித்து வருவதாகவும்,
அப்பகுதியில் இயங்கி வரும் அங்கன்வாடி மையம் நிரந்தரமாக முடங்கிவிடும் அபாயத்தில் உள்ளது. மக்களின் சுகாதரம் பாதிக்கப்படுவதாகவும், PCV பிளாண்ட் எந்த ஒரு விதிமுறையையும் பின்பற்றுவதாக தெரியவில்லை என்றும் உடனடியாக மாசு கட்டுப்பாடு ஆணையம் அந்நிறுவனத்தை ஆய்வு செய்ய வேண்டும். அப்பகுதி மக்களுக்கு மருத்துவ ரீதியான உதவிகளை செய்ய வேண்டும். அந்த நிறுவனத்தின் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். என்றும்,
அப்பகுதியின் அருகில் இருக்கும் ஏரியில் குப்பை கழிவுகளை M-sand கழிவுகள் கலந்து வருவதை ஆய்வு செய்து நீர் நிலையை பாதுகாக்க வேண்டும் என்றும், மேலும் உயிருக்கு ஆபத்தான மின் கம்பத்தை உடனடியாக மாற்றியமைத்து அப்பகுதி மக்களை காக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மக்களோடு இணைந்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மனுவாக அளிக்கிறோம், என அதில் தெரிவித்துள்ளனர்.