Petition to the collector to properly auction the quarries in Perambalur district!

பெரம்பலூர் மாவட்டத்தில் 44 கல்குவாரிகள் உள்ளன. இவற்றை நம்பி 120 கிரசர்கள் இயங்கி வருகின்றன. மேலும் 34 கல்குவாரிகள் டெண்டர் விடப்படாமல் உள்ளன. கிரசர்களில் இருந்து ஜல்லி கற்கள், சிப்ஸ், எம்சாண்டு, டஸ்ட் போன்றவை கட்டுமானம், சாலை பணிக்காக பல் வேறு மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

இந்தநிலையில் கடந்த 2 ஆண்டுகளாக டெண் டர் விடாமல் உள்ள 34 கல்குவாரிகளுக்கு உடனே டெண்டர் விட வேண்டும். பெரம்பலூர் மாவட்டத்தில் கல்குவாரி தொழிலை முறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல் வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்ட கல்குவாரி மற் றும் கிரசர் உரிமையாளர் சங்கத்தினர் நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 3வது நாளாக இன்றும் போராட்டம் நடக்கிறது.

இந்த போராட்டத் தால் தமிழகத்தில் 10க்கும் மேற்பட்ட மாவட்டங் களுக்கு கட்டுமான பணிக்காக ஜல்லி கற் கள், எம்சாண்டு, சிப்ஸ் கனரக வாகனங்களில் ஏற்றி அனுப்பப்படும் ஒட்டுமொத்த பணிகளும் முடங்கியுள்ளன. மேலும் கல்குவாரி, கிரசர்களிலும் நேரடியாக பணிபுரியும் 4,000 பேர் மற்றும் லாரிக ளில் ஏற்றி செல்லும் பணி யாளர்கள் 1,000 பேர் 5,000 பேர் வேலைநிறுத்த போராட்டத்தால் பாதிக் கப்பட்டுள்ளனர். காலவ ரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தால் நாள் ஒன்றுக்கு ரூ.10 கோடி மதிப்பிலான வர்த்தகம் தடைபட்டுள்ளது.

இந்தநிலையில் பெரம்பலூர் கலெக்டர் கற்பகத்தை இன்று காலை நேரில் சந்தித்து மனு கொடுத்தனர் .கல்குவாரி மற்றும் கிர ஷர் உரிமையாளர் சங்க தலைவர் நந்தகுமார், செயலாளர் சத்தியராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!