Petrol price hiked again
கர்நாடகத் தேர்தலையொட்டி மூன்று வாரங்களாக உயர்த்தப்படாமல் இருந்த பெட்ரோல், டீசல் விலை இன்று மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது.பெட்ரோல் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் அறிவித்து வந்தன. கர்நாடகச் சட்டமன்றத் தேர்தலில் பெட்ரோல் டீசல் விலை அறிவிப்பு பாதிப்பை ஏற்படுத்தக் கூடாது என்பதற்காகக் கடந்த 20நாட்களாக விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.இந்நிலையில், லிட்டர் 69 ரூபாய் 56காசுகளாக இருந்த டீசல் விலை இன்று 23காசுகள் உயர்த்தப்பட்டு 69 ரூபாய் 79காசுகளாக அறிவிக்கப் பட்டுள்ளது. இதேபோல் லிட்டர் 77 ரூபாய் 43காசுகளாக இருந்த பெட்ரோல் விலை இன்று 18காசுகள் உயர்த்தப்பட்டு 77ரூபாய் 61காசுகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.ஈரானுடன் அணுசக்தி உடன்பாட்டை அமெரிக்கா முறித்துக் கொண்டதால், பன்னாட்டுச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துகொண்டே வரும் நிலையில், இனிவரும் நாட்களில் பெட்ரோல் டீசல் விலை மேலும் உயர்த்தப்படும் எனக் கூறப்படுகிறது.