Petrol Scooters with Connecting Wheels for Disabled: Perambalur Collector Information!
தமிழக அரசால் மாற்றுத் திறனாளிகள் நலத் துறையின் மூலம் ஒரு கால் பாதிக்கப்பட்டு 2 கைகள் நல்ல நிலையில் உள்ள மாற்றுத்திறனாளிக்கு இணைப்பு சக்கரங்கள் பொருத்திய பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்க ஆணை பெறப்பட்டுள்ளது. 18 வயது முதல் 65 வயது வரை இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.
இது நாள் வரை அரசு துறைகளில் இணைப்பு சக்கரங்கள் பொருத்திய பெட்ரோல் ஸ்கூட்டர் பெறாதவராக இருக்க வேண்டும். கல்வி பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். எஞ்சிய ஸ்கூட்டர்கள் பணிபுரிபவர்கள் மற்றும் சுயதொழில் புரியும் மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும்.
எனவே, தகுதியுடையவர்கள் தங்களது மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல், கல்வி சான்றிதழ் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம்-4 ஆகியவற்றுடன் இ-சேவை மையத்தில் http://www.tnesevai.tn.gov.in/Citizen/Registration.apx என்ற இணையதளம் வழியாக பதிவு செய்து விண்ணப்பங்களின் நகலினை மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், பெரம்பலூர். என்ற முகவரியில் நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 04328 – 225474 என்ற அலுவலக தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என பெரம்பலூர் கலெக்டர் கற்பகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.