Pharmaceutical traders demonstrated in demand for banning sales of online drugs

ஆன்லைன் மருந்து வணிகத்தை தடை செய்யக்கோரி நாமக்கல்லில் மருந்து வணிகர்கள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆன்லைன் மருந்து விற்பனை பொதுமக்களுக்கு ஆரோக்கியமற்றது. டாக்டரின் பரிந்துரையில் மட்டுமே விற்கவேண்டிய மருந்துகள் தவறான பயன்பாட்டால் நமது சமுதாயத்தை சீரழிக்கக் கூடிய சூழ்நிலை உருவாகும். ஆன்லைன் மருந்துகளின் ஆதிக்கம் அதிகமானால் கிராமப்புறம் மற்றும் சிறிய நகரங்களில் உயிர்காக்கும் மருந்துகள் கிடைப்பது அரிதாகிவிடும்.

ஆன்லைன் மருந்து வணிகம் நடைமுறைக்கு வந்தால், மருந்து கடை தொழிலையே நம்பி இருக்கும் 8 லட்சம் பேர் நேரடியாகவும், 40 லட்சம் தொழிலாளர்கள் மறைமுகமாகவும், அவர்களுடைய குடும்பத்தினரும் வாழ்வாதாரத்தை இழக்கும் நிலை ஏற்படும். எனவே மத்திய அரசு இந்தியா முழுவதும் ஆன்லைன் மருந்து வணிகத்தை தடை செய்ய வேண்டும் என்று கோரி நாமக்கல் தாலுக்கா மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் நாமக்கல் பார்க் ரோட்டில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாநில அமைப்புச் செயலாளர் அன்பழகன் தலைமை வகித்தார். தாலுக்கா சங்க செயலாளர் தெய்வமணி, மாவட்ட நிர்வாக செயலாளர் மோகனச்சந்திரன், மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவர் மேகநாதன், முன்னாள் தலைவர் கோபிரத்தினம் உள்ளிட்ட திரளான மருந்து வணிகர்கள் போராட்டத்தில் கலந்துகொண்டனர். தாலுக்கா சங்க பொருளாளர் சுப்பிரமணி நன்றி கூறினார்.

Tags:

Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!