Pharmacist Vacancies: check the registration

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா விடுத்துள்ள தகவல்:

தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தால் 335 மருந்தாளுநர் பணியிடத்திற்கு மாநில அளவிலான பதிவு மூப்பு அடிப்படையில் பரிந்துரை செய்யப்பட உள்ளது.

இப்பணியிடத்திற்கான கல்வித் தகுதியாக டிப்ளமோ இன் பார்மஸி முடித்திருக்க வேண்டும். மேலும் இக்கல்வித்தகுதியை தமிழ்நாடு பார்மஸி கவுன்சிலில் பதிவு செய்து, தொடர்ச்சியாக புதுப்பித்தலில் வைத்திருக்க வேண்டும்.

இப்பணிக்காலியிடத்திற்கு 01.07.2018 அன்றைய நிலையில் பொதுப்பிரிவினர் வயது வரம்பு 30, இதர பிரிவினருக்கு வயது வரம்பு 57 ( Rule 12d யின் அடிப்படையில்) இப்பணியிடத்திற்கான மாநில அளவிலான பதிவு மூப்பு விவரம் பின்வருமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

முன்னுரிமையற்ற பிரிவில் எஸ்.சி.ஏ இனப்பிரிவில் 18.08.2004 பதிவு மூப்பு வரையிலும், எஸ்.சி பெண்கள் பிரிவினருக்கு 04.08.2000 வரையிலும், எஸ்.சி பொது பிரிவினருக்கு 07.12.2000 வரையிலும்,

எம்.பி.சி பிரிவு பெண்களுக்கு 03.06.1997 வரையிலும், எம்.பி.சி (பொது) பிரிவினருக்கு 22.08.1995 வரையிலும், பி.சி.எம் பிரிவு பெண்களுக்கு 10.01.1997 வரையிலும்,

பி.சி.எம் பொது பிரிவினருக்கு 15.04.1993 வரையிலும், பி.சி பெண்களுக்கு 14.06.1994 வரையிலும் பி.சி பொது பிரிவினருக்கு 15.04.1993 வரையிலும் மற்றும் முன்னுரிமை பிரிவில் நாளது தேதி வரையிலும் பதிவு மூப்பு உள்ள பதிவுதாரர்களின் விவரம் உத்தேச பதிவு மூப்புப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

இப்பதிவு மூப்புப் பட்டியலில் இடம்பெற்றுள்ள இவ்வலுவலக பதிவுதாரர்களின் பட்டியல் இவ்வலுவலக அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டுள்ளது.

எனவே, மேற்காணும் பதிவு மூப்பு வரம்பிற்குள் உள்ள பெரம்பலூர் மாவட்ட பதிவுதாரர்கள மட்டும் இவ்வலுவலகத்தில் ஒட்டப்பட்டுள்ள பதிவு மூப்பு பட்டியலில் தங்கள் பெயர் இடம்பெற்றுள்ளதா என சரிபார்த்து கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.

இப்பதிவு பட்டியலில் விடுபட்டுள்ள பதிவுதாரர்கள் மட்டும் தங்களது அனைத்து அசல் கல்விச் சான்றிதழ், வேலைவாய்ப்பு அடையாள அட்டை மற்றும் சாதிச்சான்று ஆகியவற்றுடன் 09.01.2019 க்குள் பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை, தொடர்பு கொண்டு பயன்பெறலாம், என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!