Physical fitness and certificate verification for army started today in Perambalur.
பெரம்பலுார் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள புரட்சித்தலைவர் பாரதரத்னா எம்.ஜி.ஆர் விளையாட்டு மைதானத்தில், இந்திய போர்படைக்கான முதற்கட்ட தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான உடற்தகுதி பரிசோதனை சான்றிதழ் சரிபார்ப்பு பணி முகாம் இன்று தொடங்கி வரும் 5ம் தேதி வரை நடக்கிறது.
முகாமை, கலெக்டர் க.கற்பகம் இன்று அதிகாலை கொடியசைத்து தொடங்கி வைத்தார். உதவி ராணுவ ஜெனரல் அதிகாரி பிரியேடியர் எம் எஸ் பாகி, போலீஷ் சூப்பிரண்டு ஷ்யாமளாதேவி முன்னிலை வகித்தனர்.
திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலுார், அரியலுார், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம், சிவகங்கை, இராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, துாத்துக்குடி, கன்னியாகுமரி, மயிலாடுதுரை மற்றும் காரைக்கால் ஆகிய 16 மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு நடைபெறுகிறது.
புதியவர்களுக்கு அல்ல. எனவே, முகாம் நடைபெறும் நாட்களில் புதியவர்கள் வர தேவையில்லை என இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திருச்சி மண்டல இராணுவ ஆள்சேர்ப்பு பணி அலுவலர் கர்னல் தீபாகுமார், மருத்துவ அலுவலர் டாக்டர் முதித்துப் ரெட்டி, மேஜர் நீலம் குமார், மாவட்ட வருவாய் அலுவலர் நா.அங்கையற்கண்ணி, வருவாய் கோட்டாட்சியர் ச.நிறைமதி மற்றும் ராணுவ அதிகாரிகள் கலந்து கொண்டனர்