Pity: Board president who collected votes in Perambalur: Workers who were looking for work!
பெரம்பலூர் காமராஜர் வளைவு பகுதியில், வழக்கமாக, கட்டுமான தொழிலாளர்களான கொத்தனார், சித்தாள், உள்ளிட்ட தொழிலாளர்கள் நின்று வேலையை தேடுவார்கள். அல்லது வேலையை வழங்குபவர்கள் அங்கு வந்து தொழிலாளர்களை அழைத்து செல்வார்கள்.
அவர்களிடம், இன்று பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் கே.என்.அருண்நேருவை ஆதரித்து, விவசாயிகள் தொழிலாளர் கட்சி தலைவரும் – கட்டுமான தொழிலாளர் நலவாரியத்தலைவருமான பொன்.குமார், பெரம்பலூர் காமராஜர் வளைவு பகுதியில் பொதுமக்களிடம் வாக்குகள் சேகரித்தார்!
அப்போது அவர் பேசியதாவது:
மக்கள் வரிப்பணத்தில் இருந்துதான் அரசாங்கம் நடத்த முடியும். 1 ரூபாய் வரிப்பணத்தில் வெறும் 0.29 பைசா மட்டுமே தமிழகத்திற்கு வழங்குகிறார் மோடி. ஜி.எஸ்.டி. எனும் பெயரில் தமிழகத்கை ஏமாற்றி வருகிறார் மோடி. உத்ரபிரதேசத்தாற்கு அதிகமாக வாரி வழங்குகிறார்
தி.மு.க. தலைமயிலான கூட்டணி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறேன். தி.மு.க.கூட்டணி வெற்றிக்கும், பாசிச பா.ஜ.க.அரசை அகற்றிடவும் மக்கள் முடிவு செய்துள்ளனர். வாய் ஜாலத்தின மூலம் மக்களை ஏமாற்றி விட முடியாது, பொதுமக்கள் புரிந்து வைத்துள்ளனர். தமிழகத்திற்கு துரோகம் செய்யும் பா.ஜ.க. அரசை புரிந்து வைத்துள்ளனர்.
100 ஆண்டுகளுக்கு பின் பெய்த கன மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிட, பேரிடர் நிதி பலமுறை கேட்டும் மத்திய அரசு தமிழகத்திற்கு தரவில்லை.வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்க்கவும் வரவில்லை. திருக்குறள் வளர்ச்சி மையத்தை தேசிய அளவில் கொண்டு செல்லவில்லை. தமிழகத்தில் திருக்குறளுக்கு என்ன செய்தார். சமஸ்கிருதம் மட்டும் வளர்ந்தால் போதும் என்று நினைக்கிறார் மோடி.
40 தொகுதிகளிலும் தி.மு.க.கூட்டணி வெற்றி பெறும். 200 இடங்களில் கூட பா.ஜ.க. வெற்றி பெற முடியாது. தேர்தல் பத்திரம் மூலம் விஞ்ஞான ரீதியாக 10 ஆயிரம் கோடி ஊழல் செய்துள்ளார் மோடி. 10 ஆண்டுகால பா.ஜ.க.ஆட்சியில் ஒன்றும் இல்லை.பா.ஜ.க.தேர்தல் அறிக்கை காலிடப்பா. காங்கிரஸ் தேர்தல் அறிக்கை கதாநாயகனாக உள்ளது. சமூக நீதிக்கான மாற்றம், வாழ்வாதாரத்தை உயர்த்தக் கூடிய, வறுமை ஒழிப்புக்காக எதுவும் செய்யவில்லை.
5- சதவிகிதம் கூட வளர்ச்சி பெறவில்லை. நாட்டிற்கோ, சமூகத்திற்கு பிரயோஜனமில்லை. ஆங்கிலேயர்கள் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட
44 சட்டங்களை சுருக்கியுள்ளார் மோடி. 18 வாரியங்கள் செயல்பட்டு வருகிறது. மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால் இந்த வாரியக்களையும் சுருக்கி விடுவார், என்றும், தி.மு.க.தலைமையிலான கூட்டணி மகத்தான வெற்றி பெறும். என்றும் கூறினார். பின்னர் நட்சத்திர ஓட்டலில் நடந்த செய்தியாளர்களை சந்திப்பிலும் இதே கருத்துகளை தெரிவித்தார்.
பிரச்சாரத்தில், பெரம்பலூர் எம்.எல்.ஏ பிரபாகரன், கட்டுமான மனைப்பிரிவு மாநில இணைச் செயலாளர் பொறியாளர் சிவா, மாவட்ட தலைவர் சிவபெருமாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக வாரியத் தலைவர் பொன்.குமார் காமராஜர் வளைவு பகுதியில் கட்டுமானத் தொழிலாளர்களிடம் வாக்கு சேகரித்து கொண்டிருந்த போது, அங்கிருந்த ஒரு பகுதி தொழிலாளர்கள் வந்திருப்பது தமது வாரியத் தலைவர் என தெரியவில்லை என்னவோ, வேலை கொடுக்க யராவது வந்திருக்கார்களா என வேலையை தேடுவதில் குறியாய் இருந்தனர். மேலும், புதிதாக வந்தவர்களிடம் ஆள் வேண்டும்-ங்களா என ஆர்வத்துடன் அங்கு வந்து வண்டியை நிறுத்துபவர்களிடம் கேட்டு கொண்டிருந்தனர். வேலைக்கு சென்று உழைத்து குடும்பதை காப்பற்றவும், இன்றைய நாளை வீணாகி போய்விட விட்டுவிடக் கூடாது என்பதில் குறியாய் இருந்தனர். யார் ஆட்சிக்கு வந்து என்ன உழைத்து ஓடாய் தேய்பவர்களின் வாழ்க்கை மாறா போகிறதா ? என வேலையை தேடி வண்ணம் இருந்தனர்.