பெரம்பலூர் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் காலியாக உள்ள 3 சுருக்கெழுத்து – தட்டச்சர் பணியிடங்களுக்கு தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என முதன்மை மாவட்ட நீதிபதி ஏ. நசீமாபானு தகவல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பெரம்பலூர் மாவட்ட நீதித்துறையில் தமிழ்நாடு நீதித்துறை அமைச்சுப் பணியில் காலியாக உள்ள 3 சுருக்கெழுத்து – தட்டச்சா; பணியிடங்களுக்கு தேர்வு செய்யும் பொருட்டு நேர்முகத் தேர்வு பெரம்பலூர் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது.
அதன்படி சுருக்கெழுத்து – தட்டச்சர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (முஸ்ஸீம் தவிர) – பெண்கள் – முன்னுரிமையற்றவர்கள், பிற்படுத்தப்பட்டோர் – முன்னுரிமையற்றவர்கள் 18 வயது முதல் 32 வயதிற்குள்ளும் மற்றும் பொது பிரிவு – முன்னுரிமையற்றவர்கள் 18 வயது முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
இதற்கான கல்வித் தகுதி 10-ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் சுருக்கெழுத்தில் (தமிழ் (அ) ஆங்கிலம்) ஏதேனும் ஒரு இளநிலை மற்றும் ஏதேனும் ஒரு முதுநிலையும், தட்டச்சில் (தமிழ் (அ) ஆங்கிலம்) இரண்டுமே முதுநிலையும் பெற்றிருக்க வேண்டும்.
மேலும் விவரங்கள்http://ecourts.gov.in/tn/perambalur என்ற இந்நீதிமன்ற இணையதள முகவரியில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் மூலம் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பொழுது பணி செய்யும் விபரங்களுடனும், அனைத்து கல்விச்சான்றிதழ்கள், சாதி சான்றிதழ், வேலைவாய்ப்பு அலுவலக பதிவு சான்று மற்றும் முன்னுரிமைக்கான சான்றிதழ்கள் (ஊனமுற்றோர், ஆதரவற்ற விதவை மற்றும் கலப்புத்திருமணம் மற்றும் பிறசான்றிதழ்கள்) ஒரு பாஸ்போர்ட் அளவு புகைப்படம் விண்ணப்பபப் படிவத்தில் ஒட்டி (உரிய சுயசான்றொப்பத்துடனும்) மற்றும் பிற சான்றிதழ்களிலும் சுயசான்றொப்பம் இட்டும் முதன்மை மாவட்ட நீதிபதி, முதன்மை மாவட்ட நீதிமன்றம், பெரம்பலூர் என்ற முகவரிக்கு வரும் பிப்.05 தேதிக்குள் கிடைக்குமாறு தபாலில் அனுப்ப வேண்டும்.
காலதாமதமாக வரும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் பரிசீலிக்கப்படமாட்டாது. நியமனத்திற்கு தகுதியான நபர்களை தேர்வு செய்யவோ, நேர்காணலை ஒத்திவைக்கவோ, நியமன அறிக்கையை எவ்வித முன்னறிவிப்புமின்றி ரத்து செய்யவோ முதன்மை மாவட்ட நீதிபதிக்கு முழு அதிகாரம் உண்டு.
மேலும் விண்ணப்பங்கள் வரையறுக்கப்பட்ட படிவத்தில் பூர்த்தி செய்யப்பட்டு, தபால் மூலமாக மட்டுமே அனுப்ப வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்டு சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும், அனைத்து தகவல் பரிமாற்றங்களும், தேர்வு நேர்காணலுக்கு அழைப்பும் http://ecourts.gov.in/tn/perambalur, என்ற இணையதள வலைதளத்தில் மட்டுமே வெளியிடப்படும். வேறு எந்த வகையான முறையிலும் விண்ணப்பதாரருக்கு தனிப்பட்ட முறையில் தகவல்கள் தெரிவிக்கப்படமாட்டாது. எனவே விண்ணப்பதாரர்கள் தொடர்ந்து மேற்கூறிய இணையதள வலைதளத்தை தொடர்ந்து கவனித்து தகவல்களை அறிந்து கொள்ள வெண்டும்.
விண்ணப்பிக்கும் பொது அசல் சான்றிதழ்களை இணைக்காமல், சான்றுகளின் நகல்களை மட்டுமே விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். பெரம்பலூர் மாவட்ட விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படும். எனவே மேற்கண்ட பணியிடங்களுக்கு 05.02.2016 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். என அவர் அதில் தெரிவித்துள்ளார்.