plea to improve the treatment of infectious Tamilselvan MLA special word Corona gave Rs 50 lakh.

கொரோனோ வைரஸ் தொற்றினால் உலகநாடுகள் உச்சகட்ட பீதியில் உள்ளது. இதை தடுக்கும் பொருட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவும், தமிழகத்தில் 144 தடை உத்தரவும் அமலில் உள்ளது. இந்நிலையில் தமிழக முதல்வரின் வேண்டுகோளுக்கிணங்க கொரோனோவை ஒழிக்க, தமிழக அரசுக்கு பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களும், தனியார் மற்றும் அரசு ஊழியர்கள் என அனைத்து தரப்பினரும் தங்களால் இயன்ற நிதி உதவியை அளித்து வருகின்றனர். பொதுமக்களும் தங்கள் சக்திக்கு ஏற்ப நிதி உதவியினை முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு அனுப்பி வைத்து வருகின்றனர்.
அந்தவகையில் பெரம்பலூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் துவங்கப்பட்டுள்ள கொரோனோ சிறப்பு வார்டை மேம்படுத்தி, பொதுமக்களுக்கு சிறப்பான சிகிச்சை வழங்குவதற்கு ஏதுவாக பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் தமிழ்ச்செல்வன், சட்டமன்ற சட்டமன்ற மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.50 லட்சத்தை வழங்கியுள்ளார். இதனை பெரம்பலூர் மாவட்ட அலுவலர் தெய்வநாயகியிடம் வழங்கிய தமிழ்ச்செல்வன் பொது மக்களுக்கு உயர் சிகிச்சை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.