Plea to the Girl student at the School of Missing The father complained to the police investigation,
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள தொண்டப்பாடியை சேர்ந்தவர் செல்லதுரை. இவரது மகள் வேப்பந்தட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார்.
நேற்று முன்தினம் (சனிக்கிழமை) வீட்டிலிருந்து புறப்பட்டு பள்ளிக்கு சென்ற மாணவி மாலையில் வீடு திரும்பவில்லை. மாணவியின் பெற்றோர்கள், உறவினர் வீடுகளிலும், மற்ற இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதனையடுத்து செல்லதுரை வி.களத்தூர் போலீசில் கொடுத்த புகாரின் வழக்கு பதிவு செய்து போலீசார், மாணவியை யாரேனும் கடத்தி சென்றனரா என்ற கோணத்திலும், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.