Plow the peasants using summer rains! : Announcement of Agriculture Department

பெரம்பலூர் மாவட்ட வேளாண் இயக்குநர் (பொ) ரா. சந்தானகிருஷ்ணன் விடுத்துள்ள தகவல் :

பெரம்பலூர் மாவட்டத்தில் தற்சமயம் கோடை மழை ஆரம்பித்திருப்பதால் அதனை பயன்படுத்தி விவசாயிகள் கோடை உழவு செய்வது மிகவும் அவசியம் ஆகும். கோடை மழை பெய்த உடன் நிலத்தின் சரிவின் குறுக்கே ஆழச்சால் முறையில் கோடை உழவு செய்திட வேண்டும்.

இந்த கோடை உழவு மூலம் நிலத்தில் இருக்கும் தீமை செய்யும் பூச்சிகளின் கூண்டுப்புழுக்கள், முட்டைகள் வெளிக்கொணரப்பட்டு சூரிய வெப்பத்தாலும், பறவைகளாலும் அழிக்கப்பட்டு பூச்சிகள் பெருக்கம் அடையாமல் கட்டுப்படுத்தப்படுகிறது.

மண்ணில் உள்ள களைகள் மற்றும் களை விதைகள் சூரிய வெப்பத்தின் மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது. மண் பொளபொளப்பாக மாறுவதால் மண்ணில் நீர் உறிஞ்சப்பட்டு நீர் பிடிப்பு திறன் பெறுகி மண் வளத்தை கூட்டுகிறது.

நிலத்தின் சரிவில் உழவு செய்வதினால் மழைநீர் மண்ணில் உறிஞ்சப்பட்டு மண் அரிமானத்தை தடுத்து மழைநீர் வீணாகாமல் நிலத்திலேயே சேமிக்கப்படுகிறது. வறட்சியை தாங்கி பயிர்கள் வளர ஏதுவாக அமைகிறது.

இதனால் அதிக மகசூல் கிடைக்க அதிக வாய்ப்பாக அமையும். மேலும், விவசாயிகள் கடந்த ஆண்டு பயிர் செய்த பருத்தி மற்றும் மக்காச்சோளம் பயிர்களினுடைய அறுவடைக்கு பின் உள்ள காய்ந்த செடிகளை வயலிலிருந்து அப்புறப்படுத்தி தனியாக ஓர் இடத்தில் வைத்து எரித்து விட வேண்டும்.

வயலிலேயே எரஜக்க கூடாது. வயலிலேயே எரிப்பதால் மண்ணில் உள்ள நுண்ணுயிர்கள் அழிந்து விடும். அதனால் வயலில் இல்லாமல் தனியாக ஓர் இடத்தில் வைத்து எரிக்க வேண்டும். மேலும், இவ்வாறு செய்வதினால் தண்டு மற்றும் இலைகளில் ஒளிந்திருக்கும் பூச்சிகள் அழிக்கப்பட்டு விடும். எனவே, விவசாயிகள் கோடை உழவும், அறுவடைக்கு பின் இருக்கும் காய்ந்த செடிகளை அழிப்பதும் முக்கியமானதாகும், என தெரிவித்துள்ளார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!