2017 மார்ச், 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் பெரம்பலூர் ஸ்ரீராமக்கிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தேர்வு எழுதிய 520 மாணவர்களும் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மேல்நிலைப்பள்ளி 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தொடர்ச்சியாக 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. கணித பாடத்தில் 25 பேரும், வேதியியல் பாடத்தில் 5 பேரும், உயிரியல் பாடத்தில் ஒருவரும், கணிப்பொறியியல் பாடத்தில் ஒரு மாணவரும், 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
தேர்வு எழுதிய மாணவர்களில் 3 பேர் 1180 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று ஏ கிரேடையும், பி. கிரேடில் 20 மாணவர்களும், சி கிரேடில் 54 மாணவர்களும் சாதனை படைத்துள்ளனர்.
தேர்வில் சாதனை படைத்த மாணவிகளையும், பயிற்றுவித்த ஆசிரியர்களையும், கல்வி நிறுவன தாளாளர் ம. சிவசுப்பிரமணியன், துணைத் தலைவர் எம்.எஸ் விவேகானந்தன் பள்ளி முதல்வர், துணை முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் இனிப்பு வழங்கி பாராட்டினர்.
இதே போன்று ஸ்ரீசாரதா தேவி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தேர்வெழுதிய 176 மாணவர்களும் 100 சதவீத தேர்ச்சி பெற்றனர். 3 மாணவிகள் கணித பாடத்தில் 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்றிருந்தனர்.
105 மாணவர்கள் பி. கிரேடிலும், சி கிரேடில் 24 மாணவிகளும் பெற்றிருந்தனர். இவர்களையும் பயிற்றுவித்த ஆசிரியர்களையும், கல்வி நிறுவன தாளாளர் ம. சிவசுப்பிரமணியன், துணைத் தலைவர் எம்.எஸ் விவேகானந்தன் பள்ளி முதல்வர், துணை முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் இனிப்பு வழங்கி பாராட்டினர்.