Plus Max Farmer Producer Groups at Poolampadi near Perambalur; Inaugurated by Businessman DATO S PRAKADEESH KUMAR 

 

பெரம்பலூர் மாவட்டம்? பூலாம்பாடி பேரூராட்சியில் பிளஸ் மேக்ஸ் (PLUS MAX) உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் சார்பாக பிளஸ் மேக்ஸ் உழவர் உற்பத்தியாளர்கள் குழு திறப்பு விழா நேற்று நடைபெற்றது.

பூலாம்பாடியை மையமாகக் கொண்டு, தமிழ்நாடு அளவில் புதிய தினசரி காய்கறி மார்க்கெட் தொடங்க, பூலாம்பாடி மற்றும் சுற்று வட்ட கிராம விவசாயிகளின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த மாதம் பிளஸ் மேக்ஸ் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் அலுவலகம் பூலாம்பாடி பேரூராட்சி வணிக வளாகக் கட்டிடத்தில் திறக்கப்பட்டது.

குழு ஒன்றிற்கு 20 உறுப்பினர்கள் என 50 குழுக்கள் தொடங்க உற்பத்தியாளர்கள் சார்பில் முடிவு செய்யப்பட்ட நிலையில், நேற்று முதல் கட்டமாக 18-பிளஸ் மேக்ஸ் உழவர் உற்பத்தியாளர் குழு தொடங்கப்பட்டது. இதனை தொழிலதிபர் டத்தோ எஸ்.பிரகதீஸ்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஒவ்வொரு குழுவின் பெயர் பலகையையும் திறந்து வைத்தார்.

பூலாம்பாடி, பாரதி நகர், கலியன் குன்று, புளியம்பட்டி மூளை, அரசடிகாடு, பெரியம்மா, பாளையம், உடும்பியம், கள்ளப்பட்டி ஆகிய கிராமங்களில் 18-குழுக்கள் தொடங்கப்பட்டது.

பெயர் பலகையை தொடங்கி வைத்து பேசிய டத்தோ.எஸ்.பிரகதீஸ்குமார், விவசாயிகளின் நலனுக்காக தொடங்கப்பட்டுள்ள இந்த செயல்பாடுகளுக்கு விவசாயிகளும்,பொதுமக்களும் முழு ஒத்துழைப்பு தரவேண்டுமென கேட்டுக்கொண்டார். தங்களின் ஒத்துழைப்பால் மட்டுமே நமது பகுதி மென்மேலும் வளர்ச்சியடையும் என நம்பிக்கை தெரிவித்தார்.

இந்நிகழ்வில் தொழிலதிபர்கள் இசை.பாலு, மண்மணி, பூலாம்பாடி ராம்ராஜ் நாட்டார் , மணி, செங்கூட்டுவன், ராமதாஸ், கண்ணன், கடம்பூர் பாலு, அக்ரி.சோ.மாரிமுத்து, அக்ரி.அ.நவநீதன், அரசடிக்காடு அருண்,முருகேசன், ஆறுமுகம், கள்ளப்பட்டி செந்தில் உள்பட குழு தலைவர், செயலாளர்கள், பொருளாளர்கள்& உறுப்பினர்கள், விவசாயிகள் , பொது மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

அண்மைச் செய்திகள்

Join Free Now https://dsmatrimony.com/

Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!