பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி பா.ம.க வேட்பாளர் சத்தியசீலன் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.
இதையொட்டி பெரம்பலூர் வெங்கடேசபுரத்தில் உள்ள பா.ம.க., தேர்தல் அலுவலகத்திலிருந்து பா.ம.க., தொண்டர்களுடன் சென்று பெரம்பலூர் கோட்டாசியர் அலுவலகத்தில் கோட்டாசியர் பேபியிடம் வேட்பு மனு தாக்கல் செய்து தேர்தல் உறுதிமொழி ஏற்றுக் கொண்டார்.
மாவட்ட செயலாளர் செந்தில்குமார், மாநில பொறுப்பாளர் அனுக்கூர் ராஜேந்திரைன் மற்றும் நகர செயலாளர் தேவேந்திரன், வழக்கறிஞர் இளங்கோவன் ஆகியோர் உடனிருந்தனர்.
பா.ம.க தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.