Pneumococcal conjugate vaccination program for children: Collector started in Perambalur.

குழந்தைகளுக்கான நியூமோகாக்கல் கான்ஜுகேட் தடுப்பூசி திட்டத்தினை பெரம்பலூர் கலெக்டர் ப.ஸ்ரீவெங்கட பிரியா, அரசு தலைமை மருத்துவமனையில் இன்று தொடக்கி வைத்தார், பின்னர், தெரிவித்ததாவது:

1983-ஆம் ஆண்டு முதல் தேசிய தடுப்பூசி திட்டத்தின் கீழ் காசநோய், போலியோ, மஞ்சள் காமாலை, இரணஜன்னி, கக்குவான் இருமல், தொண்டை அடைப்பான், இன்ஃபுளுயென்சா தட்டம்மை, மூளைக் காய்ச்சல் மற்றும் ரூபெல்லா ஆகிய நோய்களுக்கு பிறந்த குழந்தை முதல் அரசால் தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது.

தற்போது 2 வயதிற்குட்பட்ட குழந்தைகளை அதிகம் பாதிப்படைய செய்யும் நிமோனியா காய்ச்சல் நோயிலிருந்து தடுக்கும் பொருட்டு தேசிய தடுப்பூசி திட்த்தின்கீழ் நியூமோகாக்கல் கான்ஜுகேட் தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து ககாதாரத் துறை அமைச்சர் சென்னையில் 13.07.2021 அன்று இந்த தடுப்பூசி திட்டத்தினை தொடங்கி வைத்தார். நியூமோகாக்கல் கான்ஜுகேட் தடுப்பூசியானது குழந்தை பிறந்து ஒன்றரை மாதத்தில் முதல் தவனையும், மூன்றரை மாதத்தில் இரண்டாம் தவனையும் 9 மாதம் முடிந்த குழந்தைகளுக்கு ஊக்க தவனையும் வழங்கப்பட உள்ளது.

மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, தாலுக்கா மருத்துவமனைகள், அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் வழங்கப்பட உள்ளது. ஆண்டுதோறும் பெரம்பலூர் மாவட்டத்தில் 7915 குழந்தைகள் பயனடைய உள்ளனர். எனவே பெற்றோர்கள் தவறாமல் தங்கள் குழந்தைகளுக்கு இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

அப்போது, துணை இயக்குநர் (சுகாதார பணிகள்) மரு.கீதாராணி, தலைமை மருத்துவ கண்காணிப்பாளர் மரு.அருட்செல்வன், தேசிய நல்வாழ்வு குழும ஒருங்கிணைப்பாளர் மரு.அன்பரசு, குழந்தைகள் நல மருத்துவர் கலா உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!