Poetry, Essay, Speech Competitions for All Kinds of College Students: Perambalur Collector Info!
பெரம்பலூர் மாவட்டத்தைச் சார்ந்த கல்லூரி மாணவர்களுக்கு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் மாணவர்களிடையே பேச்சாற்றலையும், படைப்பாற்றலையும் வளர்க்கும் நோக்கில் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் வரும் 18.04.2023 அன்று நடைபெறவுள்ளது, என கலெக்டர் கற்பகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து வகை கல்லூரி மாணவர்களுக்கும் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் வருகின்ற 18.04.2023 அன்று காலை 9.00 மணிக்கு நடைபெற உள்ளது. இப்போட்டியில் கலந்து கொள்வதற்கான விண்ணப்பம் மற்றும் விதிமுறைகள் அனைத்து கல்லூரி முதல்வர்களுக்கும் அனுப்பி வைக்கப்படும்.
போட்டியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள மாணவர்கள் தங்கள் கல்லூரி முதல்வரை அணுகி விண்ணப்பத்தைப் பெற்று பூர்த்தி செய்து முதல்வரின் ஒப்பம் பெற்று கல்லூரி மூலமாக adtamildept@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
போட்டி நடைபெறும் நாளன்று பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் காலை 9.00 மணிக்கு வருகை புரிந்து போட்டிகளில் கலந்து கொள்வதற்கான வருகைப் பதிவேட்டில் ஒப்பமிட வேண்டும். ஒரு போட்டிக்கு ஒருவர் வீதம் மூன்று போட்டிக்கும் மூன்று மாணவர்கள் மட்டும் ஒரு கல்லூரிக்கு அனுப்பி வைக்கும் படி கல்லூரி முதல்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெறும் கல்லூரி மாணவர்களுக்கு முதல் பரிசு ரூ.10,000/-, இரண்டாம் பரிசு ரூ.7,000/-, மூன்றாம் பரிசு ரூ.5,000/- மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்படும். போட்டியில் முதல் பரிசுப் பெற்றவர்கள் மட்டும் மாநில அளவிலான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகளுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.
மாநிலப் போட்டிகள் தொடர்பான தகவல்கள் பின்னர் தெரிவிக்கப்படும். இந்த வாய்ப்பினைக் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.