Police destroy illict arrack near Perambalur

தமிழகம் முழுவதும் அரசு மது பானக்கடை 144 தடை உத்தரவு காரணமாக தற்போது மூடப்பட்டிருப்பதால், பல்வேறு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் விற்பனை கொடி கட்டி பறந்து வருகிறது.

பெரம்பலூர், சேலம், விழுப்புரம், கடலூர், திருச்சி, அரியலூர் மாவட்ட எல்லைகளில் உள்ள வனம் மற்றும் ஆற்றுப் படுகைகளிலும் சாரயம் காய்ச்சி விற்கும் தீவிரமாக நடந்து வருகிறது.

இந்நிலையில் , பெரம்பலூர் அருகே உள்ள மேலப்புலியூர் கிராமத்தில் சாராய ஊரல் போட்டிருப்பதாக வந்த பேரில், பெரம்பலூர் போலீசார் நடத்திய விசாரணையில் அதே கிராமத்தை சேர்ந்த ராஜா மகன் ராஜதுரை என்பவர் அவருக்கு சொந்தமான வயலில் சாரயம் காய்ச்சுவதற்காக சுமார் 320 லிட்டர் பேரலில் ஊரல் போட்டிருந்ததை கண்டுபிடித்த போலீசார், அதனை ம்பவ இடத்திலேயே அழித்ததுடன், ராஜதுரையை கைது செய்ததுடன், வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகிறார்.

அண்மைச் செய்திகள்

Join Free Now https://dsmatrimony.com/

Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!