Police file court order against financier for collecting debts and sending checks to banks in other people’s names

கடன் கொடுத்த பணத்தை வசூல் செய்து விட்டு செக் மற்றும் ஆவணங்களை வைத்துக்கொண்டு பல்வேறு நபர்கள் பெயரில் வங்கிகளில் செக்கை போட்டு மிரட்டி வரும்
கரூர் பைனான்சியர் மீது நீதிமன்ற உத்தரவுப்படி பாடாலூர் போலீசார் வழக்குப்பதிவு!

கடந்த 2016 ம் ஆண்டு, பெரம்பலூர் மாவட்டம் நாரணமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த செந்தில்முருகன் மற்றும் கூத்தனூர் கிராமத்தைச் சேர்ந்த பொன்னுசாமி ஆகிய இருவரும் கரூர் மாவட்டம் இ.பி.காலணி,தெற்கு தெரு சனப்பிரட்டி கிராமத்தைச் சேர்ந்த சந்திரசேகரன் மகன் பிரபாகரன் என்பவரின் பைனான்சில் ரூ.30 லட்சம் கடன் வாங்கியிருந்தனர். அந்த கடனுக்கு ஈடாக நெடுங்கூர் கிராமத்தில் உள்ள ஒரு நிலத்தை பொன்னுசாமி கிரையம் எழுதிக்கொடுத்திருந்தார். மேலும் பாதுகாப்பிற்காக செந்தில்முருகன் என்பவரிடம் கையொப்பம் இடப்பட்ட நிரப்பப்படாத 10 செக் மற்றும் பத்திரம்,பாண்டு, பச்சை பேப்பர் ஆகியவற்றையும் பைனான்சியர் பிரபாகரன் பெற்றுக்கொண்டார். அதன் பின்னர் பொன்னுசாமிக்கும் ,செந்தில் முருகன் ஆகிய இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் செந்தில்முருகன் தர வேண்டிய ரூ. 6 லட்த்தை பல்வேறு தவணைகளில் பைனான்சியர் பிரபாகரனிடம் கொடுத்து விட்டார். செந்தில்முருகனிடம் பணத்தை வாங்கிக் கொண்டு இவரது கையொப்பமிட்ட 10 நிரப்பப்படாத காசோலைகளை பல்வேறு நபர்களிடம் கொடுத்து நிரப்பி பல்வேறு வங்கிகளில் போட்டு வேண்டுமென்றே செந்தில்முருகன் மீது செக் மோசடி வழக்கு போட்டுள்ளார் பைனான்சியர் பிரபாகரன். இது குறித்து பாடாலூர் காவல் நிலையத்தில் செந்தில்முருகன் கடந்த 2018 ல் புகார் அளித்து மனு ரசீது பெறப்பட்டுள்ளது எண் 250/2018 ஆகும்.

அதன் பிறகு கடந்த ஜனவரி மாதம் பாளையங்கோட்டையைச் சேர்ந்த செல்வம், கரூர் பைனான்சியர் பிரபாகரன் ஆகிய இருவரும் செந்தில்முருகன் என்பவருக்கு செக் மோசடி செய்ததாக வழக்கறிஞர் மூலமாக நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இதுகுறித்து 29.02.20 அன்று பாடாலூர் போலீசாருக்கும், 29.03.20 பெரம்பலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கும் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் செந்தில்முருகன் என்பவர் வழக்கறிஞர் டி.ஆர்.பாஸ்கர் மூலமாக பெரம்பலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
வழக்கை விசாரித்த நீதிபதி கருப்புசாமி, கடன் கொடுத்த பணத்தை திரும்ப வாங்கிக்கொண்டு செக் மற்றும் பத்திரங்கள், பச்சை பாண்டு பேப்பர்கள் ஆகியவற்றை திரும்பத் தராமல் மோசடியில் ஈடுபட்டு வரும் கரூர் பைனான்சியர் பிரபாகரன் மற்றும் இவருக்கு உடந்தையாக செயல்பட்ட பாளையங்கோட்டை செல்வம் ஆகிய இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த பாடாலூர் போலீசாருக்கு உத்தரவிட்டார். அதனடிப்படையில் பாடாலூர் போலீசார், கரூர் பைனான்சியர் பிரபாகரன் மற்றும் பாளையங்கோட்டை செல்வம் ஆகிய இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!