Police have registered a case against those who violated the restraining order, did not wear masks and did not follow the social gap!

பெரம்பலூர் மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மீறி வெளியில் சுற்றிய நபர்களின் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். கொரோனா வைரஸ் இரண்டாம் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் பெரம்பலூர் மாவட்ட காவல் துறை சார்பாக முக கவசம், சனிடைசர் வழங்குதல், கபசுர குடிநீர் வழங்குதல் போன்ற பல்வேறு வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் தடை உத்தரவை மீறி வெளியில் சுற்றிக் கொண்டிருந்த 71 நபர்கள் மீது வழக்குகள் பதிவு செய்து 71 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் முக கவசம் அணியாமல் வந்த 74 நபர்களுக்கும், சமூக இடைவெளியினை பின்பற்றாத 9 நபர்கள் என மொத்தம் 83 நபர்களுக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!