Police raid Perambalur shops: Warning not to sell life-threatening weapons including knives and sickles!

தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுமார் 3000 ரவுடிகள் அதிரடியாக கைது செய்யப்பட்டிருக்கிற நிலையில், பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களில் 17 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் பெரம்பலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் எஸ்.மணி உத்தரவின் பேரில், பெரம்பலூர் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையிலான போலீசார், பெரம்பலூர் நகரில் உள்ள இரும்பு மற்றும் கயிறு மண்டி கடைகளில் கத்தி, அறிவாள், சூரி, கொடுவாள், ஈட்டி உள்ளிட்ட கூர்மையான, உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும்- அச்சுறுத்தல் ஏற்படுத்தும் ஆயுதங்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வின் போது, உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் ஆயுதங்களை விற்பனை செய்யக்கூடாது என்றும், சந்தேகிக்கும் வகையில் எவரேனும் ஆயுதங்களை கேட்டாலோ அல்லது வாங்கினாலோ அவர்களை பற்றிய விவரங்களை உடனடியாக காவல் துறைக்குத் தெரிவிக்க வேண்டும் என்றும் கூறினார். இந்த ஆய்வின் போது, எஸ்ஐ., ராம்குமார், ஏட்டுகள் கிருஷ்ணமூர்த்தி சேகர் உள்ளிட்ட போலீசார் உடன் இருந்தனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!