Police search for mysterious people, plundering millions! In the state bank near Trichy,
திருச்சி அருகே உள்ளது நம்பர்1 டோல்கேட், அங்குள்ள திருச்சி – சேலம் நெடுஞ்சாலையில் அரசுக்கு சொந்தமான பஞ்சாப் நேசனல் வங்கி இயங்கி வருகிறது. கடந்த சனி, மற்றும்ஞாயிறு இரு தினங்கள் விடுமுறை என்பதால் இன்று காலை வங்கி திறக்கப்பட்டது.
அப்போது வங்கி பாதுகாப்பு பெட்டகங்கள் உடைக்கப்பட்டு, கொள்ளை அரங்கேறிப்பதை அறிந்த ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்,
அதன் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணையில் கொள்ளையர்கள் திட்டமிட்டு கொள்ளையை அரங்கேற்றி உள்ளனர்.
வங்கியின் சுவற்றின் பின்புறம், துளை எந்திரங்கள் மூலம் துறையியட்டு உள்ளே நுழைந்து, அங்குள்ள 5 லாக்கர்களை கேஸ் வெல்டிங் மூலம் தகர்த்து எறிந்து அதனுள் வைக்கப்பட்டிருந்த பணம் நகைகளை கொள்ளையடித்து தப்பி சென்றனர்.
தொடர்ந்து லாக்கர் உரிமையாளர்கள் வரவழைக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் மதிப்பிடப்பட்டு வருகிறது. இது குறித்து காவல் துறையினர் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.
வங்கியில் கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.