Polio drops in the district: MLAs initiated; It is given to about 40 thousand children.
பெரம்பலூர் மாவட்டத்தில் இளம்பிள்ளைவாதம் நோயை ஒழிக்க, இன்று காலை 7.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை பிறந்த குழந்தை முதல் 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. அதனை டி.ஆர்.ஓ. ராஜேந்திரன் முன்னிலையில் எம்.எல்.ஏக்கள் ஆர்.டி. இராமச்சந்திரன் (குன்னம்), ஆர்.தமிழ்ச்செல்வன் (பெரம்பலூர்) ஆகியோர் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் வழங்கி தொடங்கி வைத்தனர். சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் ஆர்.கீதாராணி உள்பட பலர் உடனிருந்தனர்.
மாவட்டத்திலுள்ள அங்கன்வாடி மையங்கள், துணை சுகாதார நிலையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள் மற்றும் பேருந்து நிலையங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் என ஆக மொத்தம் 387 மையங்களில், 5 வயதிற்குட்பட்ட சுமார் 46 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது. இந்த பணியில் அங்கன்வாடி பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள், மருத்துவ பணியாளர்கள், தன்னார்வலர்கள் என ஆக மொத்தம் 1,548 பணியாளர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர்.