Polling Centers Correction: Official Consultative Meeting of Recognized Political Party Representatives in Perambalur
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைகளின்படி, பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 147.பெரம்பலூர் (தனி) சட்டமன்ற தொகுதி மற்றும் 148. குன்னம் சட்டமன்ற தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங்களின் பட்டியல் மீது உள்ள ஆட்சேபனை அல்லது கூற்றுகள் குறித்து அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் இறுதி செய்ய ஆலோசனை கூட்டம் பெரம்பலூர் கலெக்டர் ஆபீசில், அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளின் முன்னிலையில் கலெக்டர் சாந்தா தலைமையில் நடைபெற்றது.
தற்போது பெரம்பலூர் மாவட்டத்தில் 147.பெரம்பலூர் (தனி) சட்டமன்ற தொகுதியில் 332 வாக்குச்சாவடி மையங்களும், 148.குன்னம் சட்டமன்ற தொகுதியில் 320 வாக்குச்சாவடி மையங்களும் என ஆக மொத்தம் 652 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. புதிய வாக்குச்சாவடி மையங்கள் ஏதும் உருவாக்கபடவில்லை என்றும்,
மாற்றங்கள் குறித்து பொதுமக்களிடமிருந்தோ அல்லது வேறு எந்த அமைப்புகளிடமிருந்தோ ஆட்சேபனை ஏதும் பெறப்படவில்லை என்றும், இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் தெரிவிக்க ஒரு வாரம் கால அவகாசம் அரசியல் கட்சியினருக்கு வழங்கப்பட்டது. வாக்குச்சாவடி மையங்களில் ஏதேனும் மாற்றம் இருப்பின் தொடர்புடைய வாக்காளர் பதிவு அலுவலர், சப்-கலெக்டர், உதவி வாக்காளர் பதிவு அலுவலர், தாசில்தார் ஆகியோரிடம் தெரிவிக்கவும்,
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், மாற்றம் செய்தல், திருத்தம் மேற்கொள்ளல் மற்றும் நீக்கம் செய்தல் ஆகியவற்றிற்கு பொது மக்களுக்கு உதவி செய்திடும் பொருட்டு நாளது வரையில் வாக்குச்சாவடி முகவர்களை நியமனம் செய்யாத அங்கீகரிக்கபட்ட அரசியல் கட்சியினர் ஒவ்வொரு வாக்குசாவடி மையத்திற்கும், முகவர்களை நியமனம் செய்ய கொள்ள கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், டி.ஆர்.ஓ ராஜேந்திரன், ஆர்.டி.ஓ சக்திவேல், நகராட்சி ஆணையர் குமரிமன்னன், பேரூராட்சிகளின் செயல் அலுவலர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் ஆர்.இராஜபூபதி (அ.இ.அ.தி.மு.க), செ.ரவிச்சந்திரன் (திமு.க), ம.பிரபாகரன் ( பெரம்பலூர் நகர செயலாளர் ), எஸ்.செந்தில்குமார் (தே.மு.தி.க) , ப.சிவாஜிமூக்கன் (இந்திய தேசிய காங்கிரஸ்), பா.காமராசு (பகுஜன் சமாஜ் கடசி), அ.குணசேகரன் (தேசியவாத காங்கிரஸ்), வீ.ஞானசேகரன் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி), உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் வருவாய் துறை, தேர்தல் நடத்தும் அலுவலர்கள், தேர்தல் துறை பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.