Pongal congratulates everyone on behalf of KMDK: ER Eswaran

தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் பண்டிகையை அனைவரும் ஜல்லிக்கட்டோடு கொண்டாட இருக்கிறோம். கடந்த வருடம் தங்கள் வாழ்வாதாரத்திற்காக விவசாயிகள் எவ்வளவு கஷ்ட நஷ்டங்களை சந்தித்திருந்தாலும் அவற்றை எல்லாம் மறந்துவிட்டு, புது நம்பிக்கையோடு குடும்பத்துடன் சந்தோஷமாக கொண்டாடும் பண்டிகை. பொங்கல் பண்டிகை மனிதர்களுக்கு மட்டும் ஆனதல்ல. வருடந்தோறும் நமக்காக உழைக்கின்ற நம் மாடுகளுக்கானது. அவைகளை வணங்கி நன்றி தெரிவிக்கக் கூடிய விழா. விவசாயத்தையும், பொங்கலையும் வேறுவேறாக பிரித்து பார்க்க முடியாது. இந்த ஆண்டு விவசாயிகளின் பிரச்சினைகள் அனைத்திற்கும் தீர்வுக்காண கூடிய ஆண்டாக அமைய வேண்டும். தமிழக மக்கள் அனைவருக்கும் குடும்பத்தோடு மகிழ்ச்சி பெருக வாழ கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பாக பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்