Pongal festival on behalf of Namakkal City DMK, Gandhi gave him a pound of gold

நாமக்கல் நகரக் கழகம் சார்பில் தைப் பொங்கல் விழாவை முன்னிட்டு நடைபெற்ற கோலப்பட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ஒருபவுன் தங்கத்தோடு செ.காந்திசெல்வன் வழங்கினர்.

நாமக்கல் நகர திமுக சார்பில் 39 வார்டுகளிலும் பொங்கல் பண்டிகையையொட்டி, பெண்களுக்கு கோலப் போட்டி நாமக்கல் பொய்யேரிகரை இணைப்பு சாலையில் நகர பொறுப்பாளர் ராணாஆர்.ஆனந்த் தலைமையில் நடைபெற்றது.

போட்டியில் பெண்கள் அதிகாலை முதலே ஆர்வத்துடன் பங்கேற்றனர். கோலப்போட்டியில் கலந்துகொண்டுபெண்கள் விதவிதமான வண்ணமய கோலங்களை வரைந்தனர்.

போட்டியில் மொத்தம் 47 பெண்கள் கலந்துகொண்டனர். அனைவருக்கும் 10க்கு 10 சைஸ் அளவு இடம் கொடுக்கப்பட்டுகோலம் வரைய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஓவியஆசிரியைகள் 3 பேர்கொண்டகுழுவினர்அனைத்து கோலங்களையும் பார்த்து பரிசுக்குரிய கோலங்களை தேர்வு செய்தனர்.

பெண்கள் வரைந்த கோலத்தை மாவட்டதிமுக பொறுப்பாளர் காந்திசெல்வன், மாநில மகளிர் தொண்டரணி இணைச் செயலாளர் ராணி, சட்டத் திட்டக்குழு உறுப்பினர் நக்கீரன், நகர பொறுப்பாளர்ஆனந்த் மற்றும் பொறுப்புக் குழு உறுப்பினர்கள் பார்வையிட்டனர்.

இதில் முதல் பரிசுபெற்ற 23 வதுவார்டு கொசவம்பட்டியைச் சேர்ந்த பிரணீத்தா சீனிவாசனுக்கு மாவட்ட பொறுப்பாளர் செ.காந்திசெல்வன் ஒருபவுன் தங்கத் தோடு வழங்கினார். போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் ஆறுதல் பரிசுகள் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில், நகர பொறுப்புக்குழு உறுப்பினர்கள் செல்வமணி, அன்பரசன், பால்ரவிச்சந்திரன், அன்பரசு, எம்.ஆனந்தன், ரமேஷ் அண்ணாதுரை, சிவக்குமார், மணி, எஸ்.ஆனந்த், சரோஜா, மனோகரன், ரவீந்திரன் மற்றும் வார்டு செயலாளர்கள், வார்டு பிரதிநிதிகள், சார்பு அணி நிர்வாகிகள், கழக முன்னோடிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!