Pongal games today in Perambalur district in violation of corona prevention orders!
கொரோனா 3ம் அலை பரவலை தடுக்கும் விதமாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வரும நிலையில் மாவட்டங்கள் தோறும் மாவட்ட நிர்வாகங்கள் கடும் கட்டுப்பாட்டை விதித்து வருகின்றன. அதே வேளையில், பள்ளிகளுக்கு விடுமுறை உள்ளிடட பல தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டு வரும் நிலையில், பொங்கல் விளையாட்டு, உள்ளிட்ட பல்வேறு போட்டிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகமாக பரவி வரும் வேளையில், நேற்றைய நிலவரப்படி பெரம்பலூர் நகரில் 255 பேருக்கும், பெரம்பலூர் ஒன்றியத்தில் 341 பேருக்கும், ஆலத்தூர் ஒன்றியத்தில், 51 பேருக்கும், வேப்பந்தட்டை ஒன்றியத்தில் 65 பேருக்கும், வேப்பூர் ஒன்றியத்தில் 65 பேருக்கும் என மொத்தம் 522 பேருக்கு என வேகமாக பரவி வருகிறது.
இந்நிலையில் மங்களமேடு காவல் வட்டத்திற்குள் மட்டும் போலீசர் தீவிர முயற்சி எடுத்து, கொரோனா தடுப்பு நடவடிக்கையின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து கிராமங்களுக்கும், அறிவுறுத்தல் ஆணை அனுப்பி தடுத்து நிறுத்தி உள்ளனர்.மேலும், சில்லக்குடியில் இன்று நடைபெற இருந்த ஜல்லிக்கட்டும் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால், கொரோனா பரவல் அதிகமுள்ள பெரம்பலூர் நகரம் மற்றும் ஒன்றியத்தில் உரிய கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் உரிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகிறது.
இதனால் கொரோனா தொற்று தீவிரமாகும் என்பதால், வருவாய்த் துறையினர் அலட்சியம் காட்டாமல் உரிய நடவடிக்கை எடுத்து விதிகளை மீறியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கொரோனா தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டு, அப்பாவி குழந்தைகள், பொதுமக்களுக்கு தொற்றில் இருந்து காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.