Pongal gift package; In Perambalur, Minister Sivasankar started delivering!
பெரம்பலூர் மாவட்டத்தில் 1,88,022 குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் 74 குடும்பங்களுக்கு, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ வெல்லம், 50 கிராம் முந்திரிப்பருப்பு, 50 கிராம் திராட்சை வத்தல், 10 கிராம் ஏலக்காய், 500 கிராம் பாசிப்பருப்பு, நெய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், கடுகு, சீரகம் ஆகியவை தலா 100 கிராம், 50 கிராம் மிளகு, 100 கிராம் புளி, 250 கிராம் கடலைப் பருப்பு, 100 கிராம் உளுத்தம் பருப்பு, ஒரு கிலோ ரவை, ஒரு கிலோ கோதுமை மாவு, 100 கிராம் உப்பு ஆகிய பொருட்கள் துணிப்பையில் வழங்கப்ட்டு, அத்துடன் முழு செங்கரும்பு உள்ளிட்ட 21 பொங்கல் பரிசு தொகுப்புகளை தேரடி அருகில் உள்ள, நியாய விலைக்கடையில், கலெக்டர் வெங்கட்பிரியா தலைமையில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் வழங்கி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி சேர்மன் குன்னம் சி.இராஜேந்திரன் , தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் என்.ராஜேந்திரன், மாவட்ட ஊராட்சி துணை சேர்மன் முத்தமிழ்செல்வி மதியழகன், மாவட்ட பொருளாளர் செ.இரவிச்சந்திரன், ஒன்றிய செயலாளர்கள் செ.அண்ணாதுரை, தி.மதியழகன், மாவட்ட கவுண்சிலர் டாக்டர் அ.கருணாநிதி, பெரம்பலூர் ஒன்றிய பெருந்தலைவர் மீனாஅண்ணாதுரை, ஒன்றிய கழக பொறுப்பாளர் சி.ராஜேந்திரன், வேப்பந்தட்டை ஒன்றிய பெருந்தலைவர் க.ராமலிங்கம், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் பாலமுருகன், அரணாரை துரை.காமராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.