Pongal gift that can’t be bought: Disabled couple petitions the authorities to give it!

பெரம்பலூர் மாவட்டம், தொண்டப்பாடியை சேர்ந்தவர் மணிகண்டன் (35). இவரது மனைவி ராஜாமணி, இருவரும் 2 கண்ணும் பார்வையிழந்த மாற்றுத்திறனாளிகள். இவர்கள் சென்னையில் ரயில்வே ஸ்டேஷனில் பொம்மைகள் விற்று அதன் மூலம் கிடைக்கும் வருவாயில் அவர்களின் 2 குழந்தைகளையும் காப்பாற்றி ஜுவனம் செய்து வருகின்றனர். இவர்களது ரேசன் கார்டு தொண்டப்பாடி கிராமத்தின் முகவரியில் உள்ளது.

இந்நிலையில் தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகையை தொண்டப்பாடியில் உள்ள ரேஷன் கடையில் வந்து வாங்குவதற்காக புறப்பட்டபோது சென்னையில் பஸ் கூட்டம் அதிகமாக இருந்ததால் நெரிசலில் சிக்கி ஏற முடியாமல் சென்னையிலேயே தங்கி கொண்டனர். பின்னர் பொங்கல் விடுமுறை முடிந்து இன்று ரேஷன் கடைக்கு சென்று பொங்கல் பரிசுத் தொகுப்பு வாங்குவதற்காக மணிகண்டன் சென்றுள்ளார். ஆனால் கடந்த 14-ம் தேதியுடன் முடிந்து விட்டது என ரேசன் கடையில் தெரிவித்துள்ளனர்.

இதனால் மணமடைந்த மணிகண்டன் வேப்பந்தட்டை தாசில்தார் அலுவலகம் வந்து வட்ட வழங்கல் அலுவலரிடம் தமிழக அரசின் ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசுத் தொகையைப் பெற்றுத் தர வேண்டும் என வலியுறுத்தி மனு கொடுத்தார்.

இதுபோன்று பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு தேடி சென்று அரசின் உதவித்தொகையை விதிவிலக்கு அளிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

மேலும், கடந்த ஆட்சியில் வெளியூர் பணிகளுக்கு சென்றவர்கள் பொங்கல் நாட்கள் அன்றே வீடு திரும்பும் நிலை இருப்பதால், பொங்கல் முடிந்த சில நாட்களும் பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். இன்று பலர் ரேசன் கடைகளுக்கு சென்று ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!