Pongal Sports Competitions for Namakkal District Home Guards

நாமக்கல் மாவட்ட ஊர்க்காவல்படை சார்பில் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.
தமிழ்நாடு ஊர்காவல்படை நாமக்கல் மாவட்ட பிரிவின் சார்பில் ஊர்காவல்படை தினவிழா, சுயமுன்னேற்ற கருத்தரங்கம் மற்றும் விளையாட்டு போட்டிகள் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது. போட்டியை நாமக்கல் மாவட்ட போலீஸ் எஸ்பி அருளரசு துவக்கிவைத்தார். ஆயுதப்படை மற்றும் துணை தளவாய் ஊர்காவல்படை டிஎஸ்பி ஜோசப் முன்னிலை வகித்தார். துணை வட்டார தளபதி விஜயக்குமார் வரவேற்றார்.
இதில் தன்னம்பிக்கை மற்றும் சுயமுன்னேற்றம் குறித்து நாமக்கல் இளைஞர் நீதிக்குழும உறுப்பினர் தில்லைசிவக்குமார், ஆர்.புதுப்பாளையம் அரசு பள்ளி தலைமையாசிரியர் உதயக்குமார் ஆகியோர் பயிற்சி அளித்தனர். இதில் ஊர்காவல் படையினருக்கு கயிறு இழுத்தல், லக்கி கார்னர், ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட போலீஸ் எஸ்பி அருளரசு பரிசுகள் வழங்கினார். இதில் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஊர்காவல் படையினர் கலந்துகொண்டனர். முடிவில் ஊர்காவல்படை வட்டார தளபதி தில்லைகுமார் நன்றி கூறினார்.