Poolambadi Draupathi Amman Temple Annual Consecration: It is happening under the leadership of International businessman DATO S PRAKADEESH KUMAR
பெரம்பலூர் மாவட்டம், பூலாம்பாடியில் திரவுபதி அம்மன் கோவிலில் வருஷாபிஷேகம் வரும் 23-ந்தேதி தேதி வெகுவிமரிசையாக நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு, கோவிலில் தினந்தோறும் சிறப்பு பூஜைகளும் பாரதம் படிக்கும் நிகழ்வுகளும் நடந்து வருகிறது. கடந்த 6ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான திரவுபதி அம்மனுக்கு சக்தி அழைத்தல் நிகழ்ச்சி நேற்று பச்சமலை அடிவாரத்தில் வாவடி ஆற்றங்கரையில் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து கோவிலில் காப்புக்கட்டுதல் நடந்தது.
அதனைத்தொடர்ந்து 21-ந்தேதி காலையில் திரவுபதி அம்மனுக்கு திருக்கல்யாணம், சுவாமி ஊர்வலமும் நடக்ககிறது. 22-ந்தேதி நாட்டுக்கல் மனக்காட்டிலிருந்து தீர்த்தகுடம், அக்னி சட்டி எடுத்தல், அழகு குத்துதலும், அன்றிரவு விஜய்டிவி புகழ் ஈரோடு மகேஷ் மற்றும் ஆக்காட்டி ஆறுமுகம் பங்குபெறும் மாபெரும் இசை நிகழ்ச்சியும் நடக்க உள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை திரவுபதி அம்மன் கோவில் அறக்கட்டளை மற்றும் பொதுமக்கள் மற்றும் டத்தோ பிரகதீஸ்குமார் இளைஞர் நற்பணி மன்றத்தினர் செய்து வருகின்றனர்.
வருஷாபிஷேகம் வரும் 23-ந்தேதி காலையில், அனைத்து சுவாமிகளுக்கும் புனித நீர் ஊற்றப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்படும், பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படும். மாலை 4-மணிக்கு மேல் நல்லதண்ணி குளத்திலிருந்து அருளோடு புறப்பட்டு வந்து தீ மிதித்தல் நிகழ்ச்சியும், 24-ந்தேதி மாலை பொங்கல் மாவிளக்கு பூஜையும், இரவு வானவேடிக்கையுடன் ஏழு வாகனங்களில் சுவாமிகளின் ஊர்வலம் நடைபெறும், ஒயில் கும்மி மற்றும் கோலாட்டம் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
விழாவின் நிறைவுநாள் நிகழ்ச்சியாக 25-ந்தேதி மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சியும் அதனைத்தொடர்ந்து மாலையில் ஸ்ரீ தர்மராஜா பட்டாபிஷேகமும் நடைபெறுகிறது என விழாக்ழுவினர் தெரிவித்துள்ளனர்.
பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று பன்னாட்டு தொழிலதிபர் டத்தோ பிரகதீஸ்குமார் பெரும் பொருட்செலவில் பூலாம்பாடி திரவுபதி அம்மன் ஆலயத்தை புணரமைத்து கொடுத்தார். தற்போது வருடாபிஷேகமும் பன்னாட்டு தொழிலதிபர் டத்தோ பிரகதீஸ்குமார் தலைமையில் நடக்க உள்ளது.